ஆனைக் காவினில் அன்னையின் கருணை
பாவவினைப் போக்கும்
சௌபாக்கியம் தினங்களிக்கும் ()
தாமரை முகமும் புன்னகை இதழும் தேவையெலாம் அளிக்கும்
மனத் தெளிவுடன் வழி பிறக்கும் ()
தும்பிக்கை தூக்கிட வல்லப கணபதி வாசலிலே அழைப்பான்
சிம்மமும் ஆசனம் செய்திட தர்மத்தை சீர்திருத்த அருள்வான் ()
பெற்றவள் பிள்ளையைக் கற்றவ னாக்கியே சிறப்புகளைத் தருவாள்
நற்றமிழ் நாவினில் நல்லு றவாடியே
வாக்குகளைத் தருவாள்
கீர்த்தியும் புகழும் நல்லுற வாயிரம் நம்படை யாகிடுமே
சேர்த்திட அகிலாண் டேஸ்வரி நல்லறம்
நிம்மதி நிறைத்திடுமே ()
சமர்ப்பணம் சத்தியமணி 06-11-23

Om
ReplyDelete