Thursday, 25 April 2013

வரவேற்புரை - குமாரி சுசித்திராவின் ஹரி கதா நிகழ்ச்சி - வி.எஸ்.எஸ்.-நொய்டா


கதைகள் சொல்வதும் கதைகள் கேட்பதும்
காலம் காலமாக தொடரும் கதை
தாத்தா-பாட்டி சொன்ன கதை
பேரன்-பேத்தி கேட்ட கதை
காவியங்களை வளர்த்த கதை
காப்பியங்களை தொகுத்த கதை
உறங்கும் முன்னால் உரைத்த கதைகள்
உள்ளம் தனிலே விதைத்த விதைகள்
இனிக்க இனிக்க சுவைத்த தெல்லாம்
இன்று ஏதோ கனவாய் தோன்றும்
ஆனாலும்
கதையின் முடிவும் தொடர்கதைதான்
தொடங்கும் தொடரும் வளர்கதைதான்
தாத்தா-பாட்டி கூட TV பெட்டி போட
பேரன்-பேத்தி எல்லாரும் சேர்ந்தே பார்க்கும் காலம்
மொழிகள் யாவும் உண்டு அழுகை சிரிப்பு உண்டு
மின்வெட்டோ கேபிள் கட்டோ மொபைல் சீறும்
மற்ற பில்களும் ஏறும் இருந்தும் சுவையாய் மாறும்
இதிலே இறை பக்தியை வளர்ப்பவை
ஹரிகதை ..கதாகலாட்சேபம்
கதையோடு கவிதை வரும்
கதையோடு இசையும் வரும்
கதையோடு அபினயம் வரும்
கதையோடு தத்துவம் தரும்
பண்பாட்டை வளர்க்கவும்
கலாச்சாரம்  நிலைக்கவும்
பகுத்தறிவை கொடுக்கவும்
பக்தியைப் பறப்பவும் இதுவே channel
அதற்கு இறைவனின் அருளும் மெய்ஞான குருவும்
பொருமையும் திறமையும் நிகழ்கால சாதுர்யமும் தேவை
அனந்தராம தீஷிதர் கிருபான்ந்தவாரியார் கீரன் அப்போது
விஷாக ஹரி  ஆராஅமுதச்சாரியார்   சுசித்திரா இப்போது
தஞ்சை திருமதி கமலா மூர்த்தி பாட்டி
குருவாகி இன்று உருவாகி வந்த பேத்தி
டி என் சேஷகோபாலனிடம் பத்மா சாண்டியல்னிடம் இசைபெற்று
பல மேடைகள் வாழ்த்துக்களொடு இன்று நம் முன்!! 

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்