இதுவே அது அதுவே
இது
அத்வைதம்
உணர்பவனுக்கு
அர்த்தம்
இல்லைஆசை இல்லை
பெயர்
இல்லை பேதம் இல்லை
அகம்
இல்லை அகந்தை இல்லை
அவதி
இல்லை அர்ச்சனை இல்லை
உருவம்
இல்லை கருவம் இல்லை
இறப்பு
இல்லை பிறப்பு இல்லை
மெய்யும்
இல்லை பொய்யும் இல்லை
இனிப்பும்
இல்லை கசப்பும் இல்லை
தனிமை
இல்லை தவிப்பும் இல்லை
இரண்டும்
ஒன்றே இருந்தும் ஒன்றே
பிரிந்தும்
ஒன்றே கலந்தும் ஒன்றே
தெரிந்தும்
ஒன்றே மறந்தும் ஒன்றே
அறிந்தும்
ஒன்றே மறுத்தும் ஒன்றே
எல்லாம்
ஏகம்
என்றதன்
சாரம்
எனது
என்று எதுவும் இல்லை
கொடுத்ததும்
அவனே
கொடுப்பதும்
அவனே
கொள்வதும்
அவனே இவை
சொல்வதும்
அவனே
இதுவே அது அதுவே இது

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்