காந்தி என்றவுடன் மகாத்மா ஆகிடுமோ
தனக்கென்று வாழாது தாயகத்தை வாழவைத்தார்
தன்குலத்தை சேர்க்காது தான்மட்டும் கால்வைத்தார்
பகட்டாடை பட்டாடை துறந்திடவே கணையானார்
பொய்யோடு சேராது வாய்மைக்கு துணையானார்
தந்திரமாய் நடக்காது சுதந்திரமாய் சொற்பயின்றார்
மந்திரியாய் ஆளுனராய் வேண்டாது தனிநின்றார்
கோலூன்றி நடந்தாலும் கோளுரைக்க விழையாது
சோர்வின்றி சத்தியத்தை தோளேற்றி படைவென்றார்
அதிகாரம் பயன்படுத்தி அரசங்கம் நடத்தவில்லை
அடுகில்லம் ஆளடிமை அரியணையும் அவர்க்கில்லை
வறியவர் ஆடையிலே வக்கீலும் சலிக்கவில்லை
அரிசனக் குடிசையிலே வாழ்கையிலே வருந்தவில்லை
மதமின்றி இனமின்றி எல்லோரும் இந்தியராய்
வாழ்திட அவர்கனவு! வீழ்ந்திட விடுவதற்கோ ?
தன்வரவு தன் உறவு தன்நலமாய் இருந்தாலும்
இன்றுவரை அக்கனவை நாம்தூங்கி தொலைப்பதற்கோ?
காந்தியா? என்றதுமே மகாத்மா ஆகிடுமோ ?
இந்தியா! இப்படியா? அவராத்மா நோவுருமோ ?

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்