Thursday, 25 April 2013

சித்திரை நிலவே சித்திரை நிலவே


சித்திரை நிலவே சித்திரை நிலவே
சிரித்தே வானில் தவழ்ந்தே நீயும்
மயக்கும் நித்தில மணிகுண்டாய்நீ
இயக்கினாய் எங்கள் இரவைப்பகலாய்!

வறுமை  வாழும் குடிசையில்பிள்ளை
வயிறு  நிறையக் கஞ்சிக் குடித்து
உன்னைப் பார்த்தே அமுதம் என்றே
உவகை  யுடனே மாமா என்பார்!

செல்வச் செழிப்பின் சிறார் ஆங்கே
குளுகுளு அறையில் கணினிஊடோ
முழங்கு தொல்லைக்காட்சி யுடனோ
முடங்கி கிடப்பார்! திரைப்படம் களிப்பார்!!

விண்கலம் ஏறி வந்திட ஆங்கே
கத்தை நோட்டுகள் எரிக்கப் பிழைப்பார்
கண்கள் இருந்தினும் கறுந்திரைப்போட்டு
காணாதிருப்பார் உன்றன் எழிலை!

எத்துனைத் துன்பம் வந்தபோதிலும்
உன் துணைஒன்றே ஆறுதல் மருந்து
மேகமில்லா நீல்வெளிதன்னில்
உன்றன் தரிசனம் என்றன்  விருந்து!!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்