யாரிவன் [ Who is this ]



கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்    ()
வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()
அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()
தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு –  தில்லி  சார்ந்த தமிழ் சங்கங்கள் அவ்வையுடன்  , வல்லமை  

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்