இந்திய சுதந்திர திரு நாள் 2025
தர்மச் சக்கரம் நற்பாதை செலுத்திடின்
சுதர்ம சுதந்திரம் வரும்
வர்ணம் சேர்த்து பறந்தது நற்கொடி
தருணம் சேர்த்தது இனி
வஞ்சம் அழித்து வம்சமே வளர்ந்தால்
அஞ்சுமே பகைமை யாவும்
கற்கவும் கற்பிக்கவும் ஆயிரம் குறளுண்டு
நிற்கவும் அர்த்தம் உடன்
நதிநீர் நன்றாயின் குடிநீர் அமுதாகும்
நதிபாதை சுத்தமாய் செய்
வானம் பொழியும் வளமான மழைநீரை
குளம் முழுதும் நிறை
ஆறுவது மனம் சேருவது தினம்
கூறுவது சுதந்திர இனம்
ஏறுவது கொடி மாறுவது குடி
நாடுயிது அழியாத நிதி
வாய்மை உயர்நிலை தூய்மை உயிர்நிலை
தாய்மை பண்பாட்டின் தலை
பற்றிவிடு தேசம் குற்றமிட நாசம்
பெற்றவளின் சேவையினில் சுகம்
கூறுமொழி இனிக்க கேட்பதும் சுவைக்க
நூறுமொழி ஒன்றாகும் கூடி
வீதிநதி ஆக்க நீதிநெறி காக்க
ஆதியென தர்மவழி ஏகு
தப்பை வளர்த்து தகுதியென மாற்றிடின்
குப்பையே குவிந்து நாறும்
துரோகம் நசுக்கி குரோதம் விலக்கி
பாரதம் புவிவலம் வரும்
தந்திரம் அழித்து தன்திறம் சிறக்க
எந்திரம் கூட்டிடும் பணி

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்