2012 வாழ்த்து மலர்
பொழுதும்
புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள்
மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று
வளர்ந்தது பன்னிரண்டு பிறந்தது
மெதுவாய்
இளமை முதுமைக்குள் ()
அன்னை
இல்லாது பிள்ளை இல்லை
அமுதம் இல்லாது குமுதம் இல்லை
தாளம் இல்லாது இசையும்
இல்லை
தொடர்களின்
தொடரிது
உறவு இல்லாது
மயக்கம் இல்லை
உரிமை
இல்லாது இயக்கம் இல்லை
நீங்கள் இல்லாது நாங்கள் இல்லை
கவிதையின் வாழ்த்திது
பொழுதும்
புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள்
மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று
முதிர்ந்தது பன்னிரண்டு
கனிந்தது
மெதுவாய்
முதிர்ந்தது இளமைக்குள்
ஆடல்
இல்லாது பாடல் இல்லை
ஊடல்
இல்லாது கூடல் இல்லை
அனுபவம்
சொன்னது
தானம்
இல்லாது தர்மம் இல்லை
மோனம்
இல்லாது மோட்சம் இல்லை
யாரும்
இல்லாது யாரும் இல்லை
உண்மையின்
உருவிது
பொழுதும்
புலர்ந்தது புல்லினம் சிரித்தது
மலர்கள்
மலர்ந்தது மனதும் இசைத்தது
பதினொன்று
முதிர்ந்தது பன்னிரண்டு
கனிந்தது
மெதுவாய்
முதிர்ந்தது இளமைக்குள்!!

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்