வேலனுக்கு செவிமடுக்க கேட்கும் உமையே இந்த
பாலனுக்கு தயைசெய தயக்கமோ
நாளொரு துடிப்பினில் சங்கடமோ
கேளிக்கையோ மனம் இரங்குமோ ()
தாய்மைக்கும் மேலொறு சிறப்புளதோ
தவிப்படக்க தாமதம் நகைப்புனதோ ()
தோளினில் தத்தையாய் அமர்ந்திடினும்
காலினில் மணியாய் சிணுங்கிடினும்
மார்பினில் முத்தாய் சிரித்திடினும்
மகுடத்தில் எனக்கோர் இடம் தரணும் அம்மா ()
சமர்ப்பணம் சத்தியமணி 181123

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்