வண்ணங்கள் வடிவினில் முருகன் சிரிக்கிறான்
எண்ணங்கள் வரியினில் இசைத்து கேட்கிறான்
செந்தமிழ் அவனுக்கு உமைப்பாலாம்
செவியினில் கேட்டதெலாம் கொடுப்பானாம் ()
செந்நிற மாகிவிடின் கதிர்வேலன்
வெண்ணீறு குளித்திலே சிவபாலன்
நீலமயில் மீதேறும் சுகுமாரன்
பச்சைவளக் குறிஞ்சிக்கு தவசீலன் ()
மஞ்சள் பட்டணிந்தான் திருமுருகன்
கருஞ்சிகை அலங்கார
இளங்குமரன்
தீபவொளி யதினில் அருள் பொழிவான்
பாவவினை களையும் உடன் கலைவான் ()
சமர்ப்பணம் சத்தியமணி 151123

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்