கலியோடு வாழும்நிலை களைப்பாகும் வாழும்நெறி
வலியோடு அந்தணர்தம்
மனந்தனை துன்புறுத்தும்
பழியோடும் ஆட்சியறம்
பலியாகும் ஆகமங்கள்
விழியோடும் வேதனையை
விரைவாகத் தீர்ப்பாயோ
வாஞ்சையில் கடைவிழி திறந்து
அருளோடும் காமாட்சியே பாராயோ
காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர குருவே கேளாயோ 1/5
பரிகாசம் பலசெய்தும்
சதிகாரம் சில எய்தும்
நிகழ்கால தரும்துன்பம்
எதிர்காலம் புரியாமல்
மறையோதி வருமைக்குள்
வைதீகம் தர்ப்பையுடன்
இருப்போரின் வாழ்வழிக்க
அறநிலை அழவைக்கும்
வாஞ்சையில் கடைவிழி திறந்து
அருளோடும் காமாட்சியே பாராயோ
காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர குருவே கேளாயோ .. 2/5
பொருமையும் பிறப்புணர்ந்து
அருமறைகள் தினமொழிய
முக்காலம் கதிரவனின்
வந்தனம் செய்பவர்க்கு
இக்காலம் பெருஞ்சுமையா
ஆக்குவதும் அறமாமோ
வாஞ்சையில் கடைவிழி திறந்து
அருளோடும் காமாட்சியே பாராயோ
காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர குருவே கேளாயோ 3/5
கோயில்கள் மூலவரின்
அணிகலனும் களவுபெறும்
வாயில்வரும் உற்சவரின்
சிலைகளுமே மாறிவிடும்
ஆகமமும் நியம்பங்களும்
தர்மங்களும் கேலியுரும்
வாஞ்சையில் கடைவிழி திறந்து
அருளோடும் காமாட்சியே பாராயோ
காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர குருவே கேளாயோ 4/5
பொய்யெலாம் பலதிரித்து பொறுமைக்கு வலிகொடுத்தார்
கையெல்லாம் கறைபடித்து ஆன்மீகம் பலிகொடுத்தார்
வைதாலும் அமைதியென இருப்பவரை வதைத்தார்
யாகத்தில் வளர்நெருப்பை வயிற்றினில் எரிவதுவோ
வாஞ்சையில் கடைவிழி திறந்து
அருளோடும் காமாட்சியே பாராயோ
காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர குருவே கேளாயோ 5/5

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்