தாயின் துறவு சமைப்பதில்
தந்தை துறவு வளர்ப்பதில்
நதியின் துறவு நகர்வதில்
விதியின் துறவு நிகழ்வதில்
காற்றின் துறவு கடப்பதில்
நாற்றின் துறவு விளைவினில்
சோற்றின் துறவு செரிப்பதில்
கூற்றின் துறவு சேர்ப்பதில்
பகலின் துறவு உழைப்பதில்
இரவின் துறவு களைப்பதில்
உறவின் துறவு மதிப்பதில்
உணர்வின் துறவு வலிப்பதில்
முகிலின் துறவு வானத்தில்
துகிலின் துறவு மானத்தில்
தலைவன் துறவு தியாகத்தில்
தவிப்போர் துறவு சோகத்தில்

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்