உறங்கி பிழைப்பது ஒவ்வொரு நாளும்
உழைத்து பிழைப்பது எத்தனை பேரோ
படித்து பிழைப்பது பண்புடன் வாழ்தல்
பழித்து பிழைப்பதும் வாழ்வது வாழ்வோ
முயன்று பிழைப்பது முதிர்ச்சியின் பாதை
முயலாதிருப்பதும் அனுபவம் பெறுமோ
உண்மைகள் பிழைப்பது உயர்ந்தவர் நாடு
குற்றங்கள் பிழைப்பது வெறும் சுடுகாடு
நட்டவர் அறுப்பது வயல்களின் நீதி
கெட்டவர் விதைப்பது கேட்பவர் தேதி
ஒற்றுமை ஆவது வாழ்வுக்கு வளமை
சுற்றங்கள் பிரிப்பது தன்னல கயமை
சற்றெனப் பார்த்தால் சர்க்கரை சதியாம்
பெற்றதை காத்தால் தெரிந்திடும் விதியாம்
தொழிலினில் மேல்கீழ் அறத்தினைப் பொறுத்து
தொழுகையின் மேல்கீழ் வரத்தினைப் பொறுத்து
பொறுமையின் மேல்கீழ் இனத்தினைப் பொறுத்து
பெருமையின் மேல்கீழ் முடிவினைப் பொறுத்து

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்