Monday, 21 November 2022

தில்லி காமாட்சி பதிகம்

     தில்லி காமாட்சி பதிகம்    19 11 2022 4.30 மாலை


தாமதம் ஏனனம்மா 

சாத்திரம் நீயடி

வாமனன் சோதரி

மகிழம்பூ சூடடி

ஆமழல் தாளதில் 

அற்புதம் நிகழ்த்திடேன்

நாமத்தில் காமாட்சிதில்லி

காமகோடி உமையே  ....1


சித்துகள் யாவையும் சிரிப்பினில் வளருவாள்

நித்தமும் சேமமும் நிறைத்தனள் ஈசனாம்

பித்தனின்  பாதியும் பிள்ளைகள் தோளிலும்

வித்தையாய் காமாட்சிதில்லி காமகோடி உமையே.....2


கிளிமொழி பேசுவாள் ஒளிமய பார்வையால்

துளிகடை யோரமாய் துக்கமும் ஓட்டினாள்

அளித்திட அண்டசராசர

ஆளுமைக் கொண்டனள்

துளிர்ந்த  காமாட்சிதில்லி காமகோடியே உமையே ...3


நிலவினும் குளிர்பவள்

நிர்மல மானவள்

குலமெனும் குருவினை

சேர்ந்தனள் சேர்த்தனள்

நலமெலாம் பெருகிட 

நன்மையைக் காட்டினள்

வலமிகு காமாட்சிதில்லி

காமகோடி உமையே .....4



சுற்றினேன் கோயிலை

சூழ்ந்திடும் விளக்காக

பற்றினேன் திருவடியே

பணிந்தேன் படியாக

தொற்றினேன் மாலையில்

துவளாத யிதழ்களாய்

கற்றிலேன் காமாட்சிதில்லி காமகோடி உமையே.....5


கரும்பென வில்லது 

கைகளில் தாங்கிட 

அரும்புகள் கணைகளாய்

கரத்தினில் ஏந்திட 

நரம்பிட யாழென 

என்னையும் யேந்திட 

விரும்பாய் காமாட்சிதில்லி  காமகோடி உமையே....6


பிறவிகள் யாவிலும் என்னையும் ஈன்றனள்

புரவிகள் மீதினில் என்னையும் ஏற்றினள்

இரவிலும் பகலிலும் என்னுடன் காத்தனள்

உறவென காமாட்சிதில்லி காமகோடி உமையே....7



முத்திளம் முறுவலும் 

கீதமும் தந்தனள்

அத்திள கதிரென 

முகமதை கண்டனள்

நித்திலம் ஆண்டவள்

நெஞ்சினில்  வாழ்பவள்

பத்தரையே காமாட்சிதில்லி

காமகோடி உமையே....8


சுந்தரன்  சொக்கனின்

மதுரைக்கு  தலைவி

தந்திரம் யாவிற்கும் 

தலைமக ளானவள்

மந்திர ஜபத்தினில்

மகிமைகள் காட்டிடும்

சந்தமே காமாட்சிதில்லி

காமகோடி உமையே....9


சந்தனக் காப்பினில்

சந்தங்கள் சேர்ப்பவள்

கந்தன் சுவாமிநாதக்

குன்றினை ஏற்றவள்

வந்திட செய்தெனை

இக்கவி ஆற்றினள்

விந்தை   காமாட்சிதில்லி

காமகோடி உமையே.....10


அன்னை யென்பாயின்

அன்னையாய் ஆனவள்

தந்தையாய் வேண்டிடின்

தந்தையாய் ஆனவள்

குருவென வேண்டிடின்

குருவென் றானவள் கல்ப

தருவே  காமாட்சிதில்லி

காமகோடி உமையே துணை  


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்