பிரிவினையை தூண்டுவது யாரோ ?
பிழையாக மண்ணில் பிறந்தாரோ ?
விளையாட்டு வினையாகு மறியாரோ
தலையாட்டி பொம்மை களைப்போலோ ?
நல்லவிதை ஊன்றுவதை விட்டு
நஞ்சுவிதை தூவுவது பாவம்
கள்ளமன மானதுடன் வஞ்சம்
கட்டிபிடித்தாளுவது சாபம்
குள்ளநரி போலவரும் துரோகம்
குலைத்துவிடும் நாட்டுவளங் காணீர்
சொல்லவரும் தீர்ப்புகளைப் பாரீர்
சுதந்திரமா தந்திரமா கேளீர் ( )
நற்புத்தி செயலுறுவை விட்டார்
நயயுத்தி களைவெளியில் போட்டார்
மண்நலத்தை காப்பதுபோல் நஞ்சை
தன்நலத்தை சேர்ப்பதிலே சிந்தை
தர்மம் அறம் வாழ்வுநெறி
எல்லாம்
தங்கிடவே ஒன்றுபட வாரீர் ( )

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்