விதி சுழல் ( சத்தியமணி 25 11 22 )
முதியோர் பெரியோர் அடித்தோர்க்கு
முதுமைப் பருவம் மட்டுமல்ல
விதியால் வரும்பல
பிறவிகளாயாவும்
நாயாய் பேயாய் துன்பம்தான்
பெற்றதும் உற்ற பிள்ளைகளுக்கு
திருடவும் கற்று தருவதுமே
குற்றமாய் தண்டனை முதுமையிலேதான்
மற்றவை தனிமையில் நரகம்வரை
பாவங்கள் யாவையும் செய்துவிட்டு
சித்தரின் காலில் விழுந்தாலும்
கர்மம் உனக்கே அறியாதோ
தவமுனி கர்மங்கள் துறந்தவர்கள்
இல்லறம் என்றொரு பகட்டினிலே
வாழ்தலும் அல்ல தெரியாது
நல்லறமென பெருமை
சொல்லிடவே
செல்வந்தர் ஆதலும் சிறப்புயில்லை
மடங்கள் யாவிலும் சேவையென
தன்னல முடனதில்
வாழுவதும்
குடங்களில் மெதுவாய் கழிவுகளை
நிரப்பிட அதிலுடன் குளிப்பதுபோல்
துறவுகள் என்பது ஆசைகளை
துறப்பதும் துட்டம் மறப்பதுமே
உறவுகள் என்பது மெய்யுரைத்து
இறைவனின் ஒளியில் கலப்பதுவே
சிவனின் ஆணையில் பிறவிகளும்
அவனின் கருமம்
விதிசுழலும்
இனிமேல் ஆவது நீதிருந்து
இதற்குமேல் அருள் இலைமருந்து

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்