குற்றமே கொற்றமாய் கொலைகளவு உற்றமாய்
சுற்றமே கொள்ளையாய் கொடுஞ்சொற் பயிலுமாய
விற்றுமே வீணராகி நாட்டையே துண்டுபடும்
புற்றுநோய் கிருமியரை
அழிக்கவா நரசிங்கா.
சாரியாய் பொய்கள்பல சாற்றுவார் பயிலநித்தம்
வாரியும் வசனமாயம்
வஞ்சினைக் காட்டசுத்தம்
காரியும் உமிழ்ந்தும்பிச்சை
காசுக்காய் துரோகமிட்டார்
மாரியாய் பிளந்தசுரர்
அழிக்கவா நரசிங்கா
சேருவார் இடமும்தீதே
பேசிடும் பொருளுதீதே
கூறுவார் கூற்றுதீதே
கொள்கையோ கொடுமைத்தீதே
மீறுவார் அறமும்தீதே
மெய்யதன் தொழிலும்தீதே
போறும்வா பிளந்துவா
அழிக்கவா நரசிங்கா

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்