Sunday, 27 November 2022

முதுமையிலும் இனிமையே

 அவமானம் படும்போது 

அவதானம் புரியணும்

அசிங்கம் செய்வோர்முன்

அவதாரம் காட்டணும்


புண்படுத்த முயல்வோர்முன்

பண்படுத்தி வாழணும்

மண்படுக்கும் முன்னால்நாம்

மனிதாஎடுத்து காட்டணும்


தள்ளிவிடும் போதெழுந்து

தனித்துவத்தை கூறனும்

வீழ்ந்தபின் விசையுடனே

வெற்றிவாகை சூடணும்


வெட்டியுடன் வாதாடும்

கூட்டமெலாம் தவிர்க்கணும்

பெட்டியிலே ரத்தினம்போல்

நாவிலின்பம் மின்னனும்


கையளவுக்கு மேலாகும்

ஆசையெலாம் மறுக்கணும்

மெய்யளவு தான்சுவாசம்

என்பதையேன் மறக்கணும்


எவர்பதவி சொத்துபணம்

 ஏய்ப்பதும் ஓர்பாவமே

அவர்நலனை காக்கவெனில்

சேர்ப்பதும் ஏராளமே


பொய்பேச தோன்றிவிடின்

பூதமுன்னை விழுங்கிடும்

செய்யென்று தவறுகளால்

சீக்கிரத்தில் நரகமே 


வயிறார பசிநீக்கும்

பணியும் ஒருபூசையே

அயராத அறமுழைப்பு

அதுவும் ஒருயாகமே


தினமாறும் பொழுதுனது 

முதிர்ச்சியுற அறிவிலே

இளைப்பாறு களைப்பாறு  முதுமையிலும் இனிமையே


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்