Wednesday, 24 May 2023

மகமாயி

வாடி நிற்கும் வேளையிலே வலிமைத் தருபவளே 

ஓடி வந்துடன் காப்பவளே மாமகமாயி உமையவளே  

தேடி உன்னிடம் சரணம் அடைந்தேன் துயரம் தனைவிலக்கு 

பாடி துதித்திடும் பிள்ளையைப்பார் மனமிளகாதா  உனக்கு ()


ஈன்ற அன்னைகள் பலரிருக்க 

அம்மா என்றால் நீ தானே 

நீண்ட வறுமையும் பசிநீக்கும் 

ஆத்தா என்றால் நீ தானே 

வேப்பிலை போல நோய்தீர்க்கும் 

மூலிகை மஞ்சள் ஆனவளே 

சாப்பிடும் கஞ்சியும் கூழானாலும் 

அமுதாய் ஏழைக்கு ஆனவளே


ஏமாற்று காரரிடமிருந்து 

சடுதியில் என்னைக் காப்பாயா 

வஞ்சக   காரரிடமிருந்து

விரைந்து என்னைக் காப்பாயா 

உதவி செய்வார் யாருமில்லை 

உண்மை அனைத்தும் நீதானே

பதவி செல்வம் ஆயுளுமே

தருவதும் காப்பதும்  நீதானே


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்