Tuesday, 23 May 2023

திருவாழ் மொழி

ஓமெனும் மூலம் ஒளிந்திடும் மூலம்

விரிந்திடும் மூலம் ஒடுங்கிடும்   மூலம்

வெளியெனும் மூலம்   உள்ளெனும் மூலம் 

ஒலியெனும்  மூலம்  ஒளியெனும் மூலம்

கருவெனும் மூலம்  திருவெனும் மூலம்

உருவெனும் மூலம்   அருவெனும் மூலம்

மூச்செனும் மூலம்  முதிர்ந்திடும் மூலம் 

கம்மெனும் மூலம்   கணபதி  தானே       1/100


ஒன்றென தெரிவான் இரண்டென தெரிவான்

உருவென  தெரிவான் அருவெனத் தெரிவான்

மறைந்திட தெரிவான் தெரிந்திட தெரிவான்

மூடினும் தெரிவான்  திறப்பினும் தெரிவான் 

அடியினில் தெரிவான் முடியினில் தெரிவான்

யாகத்தில் தெரிவான் யோகத்தில் தெரிவான்

நிட்டையில் தெரிவான் நெற்றியில் தெரிவான்

வெற்றியில் தெரிவான்  வேலவன்   தானே     2/100


ஓர்மையில்  வசி நேர்மையில் வசி

உள்ளிலே  வசி உருவிலே  வசி 

அடக்கியும் வசி  இயக்கியும்  வசி 

கதிரினில் வசி மதியினில் வசி 

பிரித்திட வசி  சேர்த்திட வசி 

அறிந்திட வசி மறைந்திட வசி 

மலையினில் வசி  குகையினுள் வசி

ஓமென வசி  ஒளிதரும் சிவமே ...... 3/100


அன்னையே சக்தி   பிள்ளையும் சக்தி 

சேர்ந்தவள் சக்தி    ஈன்றவள் சக்தி 

இயக்கமும் சக்தி    மயக்கமும் சக்தி 

சிந்தையும் சக்தி    செயல்திறன் சக்தி 

காலமும் சக்தி     நேரமும் சக்தி

காரணம் சக்தி    கலைகளும் சக்தி 

களிப்பும் சக்தி     காப்பாயும் சக்தி 

அன்பும் சக்தி    ஆனந்தம் சக்தி 

அமுதமும் சக்தி    அன்னையே சக்தி  4/100


தவழ்வது அறிவு 

பார்ப்பது அறிவு 

உறவினை அறிந்து

உணர்வது அறிவு 

கற்பது அறிவு 

கேட்பது அறிவு  

படிப்பது அறிவு 

நடப்பது அறிவு 

தேர்வது அறிவு

தெளிவது அறிவு

நல்லறம் பயின்று  

நூல்கள் பயிலினும் 

நட்பினை அறிந்து  

வாழ்தல் பேரரறிவே ....5/100


ஆய்வு இலாத நாளை

ஓய்வு  இலாத ஆசை 

சாய்வு இலாத  பதவி 

வாய்வு இலாத வயிறு தேய்வு இலாத செல்வம் தோய்வு இலாத கர்வம்

காயம் இலாத காயம் 

சாயம் இலாத ஆடை 

நியாயம் இலாத நீதி 

நேயம் இலாத சாதி

மாய்வு இலாத மாயை 

பேயுடன் வாழும் பிரேதமே

....8/100

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்