Thursday, 18 May 2023

குரு பாதுகை குறள்

திருவாகி வந்தென் குற்றம் துடைப்பார் 

உருவாகி ஊட்டும் குரு

மாயவிளை யாடல்தமை மதிவீழ செய்யாது 

காயமெலாம் காக்கும் குரு 

ஆனந்த ஆனந்த ஆனந்த  பொழிவாகி 

தானந்த மாகிடும் குரு 

துன்பம்  கொடுத்து துயரம் தனைமாற 

இன்பம் கொடுக்கும் குரு

பிறவிகள் அறுக்க பித்தமெலாம் அழிக்க 

அருவிகள் அருளாக குரு

பிழையோ பாவமோ பித்தமோ பிணிநீக்க 

மழையாக மந்திரம் குரு

ஞானமும் நல்லறிவு சாதுர்யம் தன்னடக்கம்

தானங்க மாகிடும்  குரு 

தெரியாது புரியாது தவித்திடும்  நிலைமாற

குறையாத வளந்தான் குரு

வித்தை கற்பித்து சத்தை தெளிவிக்க 

சித்தியுள் நிறைந்த குரு

முடியாத காரியம் விதியென காரணம்

அடியாலே  நிகழ்த்தும் குரு

ஒழுக்கம் தவநெறி நல்லறம் பாக்கியம் 

வழங்கும் பகவான் குரு

அச்சம் பயமும் சந்தேகம் விரக்தியிவை 
எச்சமிலாது காக்கும் குரு 

பாதையும் காண்பித்து பயணமும் காண்பித்து 
உபாதைகள் விலக்கும் குரு 

அழுகிற பொழுதிலே ஆறுதலோடு அருளால் அரவணைக்க குரு

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்