Sunday, 14 May 2023

கலியுக குறள் அதிகாரம் தேர்தல்


அறுபதுக்கும் ஆறுக்கும் வேறுபாடு அறியாதவர்

கூறுவதும் சரியாகுமோ சொல்..1

எல்லைகள் தாண்டி இலவசம் யாவும்பெற 

உள்ளுரில் ஆண்டிகள் கதை..2

இலஞ்சம் கொடுத்தார்  இலஞ்சம் பெற்றார் 

இருவரின் கைகளும் பிழை 3

ஓசியாய் ஆசையாய் வாங்கிய ஓட்டெலாம்

பாசியாய் சாக்கடை வரும்...4

எடுத்த புண்ணியம் கெடுத்து வீணடிக்க 

அடுத்த பிறவியும் புழுவே..5

பொய்யும் புரட்டும் பெய்யும் வரைக்கும் 

உய்யும் உல்லாச பணி...6

இளித்தவர் ஒருபுறம் இழந்தவர் ஒருபுறம்

இளைத்தவர் படித்தவர் தான்...7

தேற்றுதல் இல்லை தேடுதல் இல்லை 

ஆறுதல்  ஆற்றில் மணல்..8

சின்னம் காட்டியே பின்னம் ஆக்கினர்

இன்னும்  என்னென்ன வரும்....9

மக்களே மக்களை ஏய்க்கும் மைதானம்

எக்காலம் இன்பம் பெறும்..10

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்