Wednesday, 17 May 2023

காத்திடு வேலாய்

குறையிலா பொன்னென மாற்றிடு  மணியாய்

நிறைவொடு மாலையாய் ஏற்றிடு அணியாய் !

களிப்புடன் கந்தனே குமரனே அறியாய் 

களைப்புறு வேனெனை காத்திடும் வேலாய் ()

மறைமுகம் எனக்கில்லை மறை முகமானாய்

துறைமுகம் பொற்றடி நாவியில் சேராய்

அறிமுகம் செய்தெனைக் கரிமுகத் தூணாய்

கறைமுகங் காணாது காத்திடும் வேலாய் ()

அலையென மனமாட அகந்தை பந்தாட 

இலையென காற்றாட இன்பமும் அற்றாட 

நிலையென  நானில்லை விரயமாய் நாளில்லை 

மலையென நம்பினோம் காத்திடு வேலாய்()

சுழன்றிடும் புவிமதி சுற்றிடும் கோளாய் 

சுழன்றிடும் விதிவழி பிறவிகள் ஆனாய்

சுழன்றிட  வேல்தனை செலுத்திடு வீராய்

சுழன்றிடும் பிணியறு காத்திடு வேலாய் ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்