Sunday, 27 November 2022

அறியாயோ சிறுகிளியே


அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)


நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது


நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது


கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்


நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே



எதுவும் இல்லை என்றே சொல்வார் 


பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்


அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்


பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே


கதவை மூடிட கண்ணை மூடிட


செய்திடும் தப்புகள் காண்பான்


காலசக்கர மேந்திட புவிபோல்


பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே




கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்


வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்


நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்


யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே



வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல 


பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல


உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல


மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே



பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ


பாரில் முழுதும்  உனைக்கண்டால்


கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்


பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே   



பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை


விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே


முதுமையிலும் இனிமையே

 அவமானம் படும்போது 

அவதானம் புரியணும்

அசிங்கம் செய்வோர்முன்

அவதாரம் காட்டணும்


புண்படுத்த முயல்வோர்முன்

பண்படுத்தி வாழணும்

மண்படுக்கும் முன்னால்நாம்

மனிதாஎடுத்து காட்டணும்


தள்ளிவிடும் போதெழுந்து

தனித்துவத்தை கூறனும்

வீழ்ந்தபின் விசையுடனே

வெற்றிவாகை சூடணும்


வெட்டியுடன் வாதாடும்

கூட்டமெலாம் தவிர்க்கணும்

பெட்டியிலே ரத்தினம்போல்

நாவிலின்பம் மின்னனும்


கையளவுக்கு மேலாகும்

ஆசையெலாம் மறுக்கணும்

மெய்யளவு தான்சுவாசம்

என்பதையேன் மறக்கணும்


எவர்பதவி சொத்துபணம்

 ஏய்ப்பதும் ஓர்பாவமே

அவர்நலனை காக்கவெனில்

சேர்ப்பதும் ஏராளமே


பொய்பேச தோன்றிவிடின்

பூதமுன்னை விழுங்கிடும்

செய்யென்று தவறுகளால்

சீக்கிரத்தில் நரகமே 


வயிறார பசிநீக்கும்

பணியும் ஒருபூசையே

அயராத அறமுழைப்பு

அதுவும் ஒருயாகமே


தினமாறும் பொழுதுனது 

முதிர்ச்சியுற அறிவிலே

இளைப்பாறு களைப்பாறு  முதுமையிலும் இனிமையே


விதி சுழல் ( சத்தியமணி 25 11 22 )

 விதி சுழல்  ( சத்தியமணி 25 11 22 ) 


முதியோர் பெரியோர் அடித்தோர்க்கு

முதுமைப் பருவம் மட்டுமல்ல

விதியால் வரும்பல

பிறவிகளாயாவும்

நாயாய் பேயாய் துன்பம்தான்


பெற்றதும் உற்ற பிள்ளைகளுக்கு

திருடவும் கற்று தருவதுமே

குற்றமாய் தண்டனை முதுமையிலேதான்

மற்றவை தனிமையில் நரகம்வரை


பாவங்கள் யாவையும் செய்துவிட்டு

சித்தரின் காலில் விழுந்தாலும்

கர்மம் உனக்கே அறியாதோ

தவமுனி  கர்மங்கள் துறந்தவர்கள்


இல்லறம் என்றொரு பகட்டினிலே 

வாழ்தலும் அல்ல தெரியாது

நல்லறமென பெருமை

சொல்லிடவே 

செல்வந்தர் ஆதலும் சிறப்புயில்லை


மடங்கள் யாவிலும் சேவையென

தன்னல முடனதில்

வாழுவதும்

குடங்களில் மெதுவாய் கழிவுகளை

நிரப்பிட அதிலுடன் குளிப்பதுபோல்


துறவுகள் என்பது ஆசைகளை

துறப்பதும் துட்டம் மறப்பதுமே 

உறவுகள் என்பது மெய்யுரைத்து

இறைவனின் ஒளியில் கலப்பதுவே 


சிவனின் ஆணையில் பிறவிகளும்

அவனின் கருமம்

விதிசுழலும்

இனிமேல் ஆவது நீதிருந்து 

இதற்குமேல் அருள் இலைமருந்து

Saturday, 26 November 2022

அழகன் முருகனே

 அழகன் முருகனே அவனென் தலைவனே

பழகும் தமிழிலே கொஞ்சும் குமரனே

நெஞ்சம் முழுவதும் நிறைந்திடும் கந்தனே

 நெற்றி குங்குமம் தனிலொருசு கந்தனே  ( ) 


மயிலை ஆடவைத்து மனதை ஆடவைத்தான்

மழைதரு மேகமாய் மடலில் நீரவிழ்த்தான்

இதழினில் தேனவிழ்த்தான் இதமாய் பாடவைத்தான் 

 இருவிழி வேலமைத்தான் 

இளமைத் தெரியவித்தான் ()


பன்னிரு விழிகளுமே என்னை காணவரும் 

முன்னிரு தோள்களிலும் மாலை மாற்றவரும் 

தன்னரு கினிலழைத்து 

தழுவிட மயிலமர்ந்து

என்னுடன் ஆளவந்தான்  இன்முகம் காட்டுகின்றான் ( )

Tuesday, 22 November 2022

எழுமலையான் கீர்த்தி

    (வெண்டுறை பாக்கள்)

மண்ணாய்ந்து கையளந்து வாயினிலே களித்து

விண்ணாய்ந்து காலளத்து   முவ்வுலகை அளித்து

கண்ணாய்ந்து  கோபியரின் காதலுளம்  பழித்த

அண்ணாந்து  மலைநின்ற பெம்மான்


மலைவண்ணம்  கண்டவர்க்கு பிரமாண்ட தெரிவதாம்

சிகைவண்ணம்  கண்டவர்க்கு  முகில்கூட்ட பொழிவதாம்

நகைவண்ணம் கண்மூடி  மண்வரைந்த வதனம்

இமைவண்ணம் இமையார்க்கு அரிது


திருமலை என்பாரும்  எழுமலை என்பாரும்

குருமலை என்பாரும்  கோவிந்தா என்பாரும்

ஒருமலை நுனிவிரலில் தூக்கியே காத்தவன்

உருமலை தோற்றமே  அறிவாரோ


 நாமம் குழைத்து நெற்றியில் இட்டாலும்

நாமம் நினைத்து நாவினில் அழைத்தாலும்

நாமம் மறந்து   நற்றாளில் விழைந்தாலும்

நாமும் கோவிந்தா  என்பதே


நிலவன்னை சீனிவாசன் ஈன்றெடுத்த கதையும்

நலகொண்டு  பதுமவதி  மணமுடித்த பின்னும்

மலரன்னை மலையடியில் அறிவதெலாம் அடியோரே

மலையேதான் மாலவன் வடிவு









Monday, 21 November 2022

தில்லி காமாட்சி பதிகம்

     தில்லி காமாட்சி பதிகம்    19 11 2022 4.30 மாலை


தாமதம் ஏனனம்மா 

சாத்திரம் நீயடி

வாமனன் சோதரி

மகிழம்பூ சூடடி

ஆமழல் தாளதில் 

அற்புதம் நிகழ்த்திடேன்

நாமத்தில் காமாட்சிதில்லி

காமகோடி உமையே  ....1


சித்துகள் யாவையும் சிரிப்பினில் வளருவாள்

நித்தமும் சேமமும் நிறைத்தனள் ஈசனாம்

பித்தனின்  பாதியும் பிள்ளைகள் தோளிலும்

வித்தையாய் காமாட்சிதில்லி காமகோடி உமையே.....2


கிளிமொழி பேசுவாள் ஒளிமய பார்வையால்

துளிகடை யோரமாய் துக்கமும் ஓட்டினாள்

அளித்திட அண்டசராசர

ஆளுமைக் கொண்டனள்

துளிர்ந்த  காமாட்சிதில்லி காமகோடியே உமையே ...3


நிலவினும் குளிர்பவள்

நிர்மல மானவள்

குலமெனும் குருவினை

சேர்ந்தனள் சேர்த்தனள்

நலமெலாம் பெருகிட 

நன்மையைக் காட்டினள்

வலமிகு காமாட்சிதில்லி

காமகோடி உமையே .....4



சுற்றினேன் கோயிலை

சூழ்ந்திடும் விளக்காக

பற்றினேன் திருவடியே

பணிந்தேன் படியாக

தொற்றினேன் மாலையில்

துவளாத யிதழ்களாய்

கற்றிலேன் காமாட்சிதில்லி காமகோடி உமையே.....5


கரும்பென வில்லது 

கைகளில் தாங்கிட 

அரும்புகள் கணைகளாய்

கரத்தினில் ஏந்திட 

நரம்பிட யாழென 

என்னையும் யேந்திட 

விரும்பாய் காமாட்சிதில்லி  காமகோடி உமையே....6


பிறவிகள் யாவிலும் என்னையும் ஈன்றனள்

புரவிகள் மீதினில் என்னையும் ஏற்றினள்

இரவிலும் பகலிலும் என்னுடன் காத்தனள்

உறவென காமாட்சிதில்லி காமகோடி உமையே....7



முத்திளம் முறுவலும் 

கீதமும் தந்தனள்

அத்திள கதிரென 

முகமதை கண்டனள்

நித்திலம் ஆண்டவள்

நெஞ்சினில்  வாழ்பவள்

பத்தரையே காமாட்சிதில்லி

காமகோடி உமையே....8


சுந்தரன்  சொக்கனின்

மதுரைக்கு  தலைவி

தந்திரம் யாவிற்கும் 

தலைமக ளானவள்

மந்திர ஜபத்தினில்

மகிமைகள் காட்டிடும்

சந்தமே காமாட்சிதில்லி

காமகோடி உமையே....9


சந்தனக் காப்பினில்

சந்தங்கள் சேர்ப்பவள்

கந்தன் சுவாமிநாதக்

குன்றினை ஏற்றவள்

வந்திட செய்தெனை

இக்கவி ஆற்றினள்

விந்தை   காமாட்சிதில்லி

காமகோடி உமையே.....10


அன்னை யென்பாயின்

அன்னையாய் ஆனவள்

தந்தையாய் வேண்டிடின்

தந்தையாய் ஆனவள்

குருவென வேண்டிடின்

குருவென் றானவள் கல்ப

தருவே  காமாட்சிதில்லி

காமகோடி உமையே துணை  


Friday, 18 November 2022

வாழ்க்கை

எதையோ தேடி எதுவோ கிடைக்கும்

இதுதான் வாழும் வாழ்வின் குணமா ?

மெதுவாய் காதினில் விழும் கேள்விக்கு

பதில் யார் சொல்வார் மவுனமா ?


கல்லாய் இருந்தால் சிலையாய் மாறும்

உளியுடன் சிற்பியும் உடன்வரும்போது

சில்லாய் போனதும் மண்ணாய் போவதும்

கலியுடன் வஞ்சனை பயின்றிடும்போது 


ஓடையும் தேங்கிடும் நீரலையாவும்

நதியில் சேர்ந்தால் கடலாய்மாறும்

இடையில் கெட்டவர் கூட்டினிலோட

சாக்கடையானால் யாருக்கு  சேரும்


ஆணாய் பெண்ணாய் நல்லறமானால்

வானில் ஆண்டவன் சந்நிதியுண்டு

வீணாய் போகிட  மனதுடன்போனால்

கற்றது எல்லாம்  கசடையின்துண்டு


வலியுடன் பெற்றவள் அழுதிட்டாலும்

வலிவுடன் தந்தை புலம்பிட்டாலும்

கல்வியை தந்தவர் சலித்திட்டாலும்

ஆண்டவன் கணக்கில் எதிர்மறையாமே


பொய்யும் புரட்டும் நம் துணையாயின்

போதாகாலம் முன்வரலாகும்

சூழ்ச்சியும்  கயமையும் பணியாளாயின்

வீழ்ச்சியும் தள்ளிவிட தயங்காது

மாசுடை மனதும்  வஞ்சமும் நட்பா

மடியும் தருணம் கைகொடுக்காது

ஆசையும் மாயையும் உன்வரவேற்பா

ஓசையிலாது ஆண்டவன் முடிப்பான்


வாழ்க்கை என்பது பள்ளியறையாம்

வாழ்க்கை என்பது அறகலைத் துறையாம்

வாழ்க்கை  பெற்றதும்  நமக்கொரு பாத்திரம்

வாழ்க்கை பயனென் அரியது பத்திரம்




பிழைப்புகள் பிழைகள்

உறங்கி பிழைப்பது ஒவ்வொரு நாளும்

உழைத்து பிழைப்பது எத்தனை பேரோ

படித்து பிழைப்பது பண்புடன் வாழ்தல் 

பழித்து பிழைப்பதும் வாழ்வது வாழ்வோ

முயன்று பிழைப்பது  முதிர்ச்சியின் பாதை

முயலாதிருப்பதும் அனுபவம் பெறுமோ

உண்மைகள் பிழைப்பது உயர்ந்தவர் நாடு

குற்றங்கள் பிழைப்பது வெறும் சுடுகாடு

நட்டவர் அறுப்பது வயல்களின் நீதி

கெட்டவர் விதைப்பது கேட்பவர் தேதி

ஒற்றுமை ஆவது  வாழ்வுக்கு வளமை

சுற்றங்கள் பிரிப்பது தன்னல கயமை

சற்றெனப் பார்த்தால் சர்க்கரை சதியாம்

பெற்றதை காத்தால் தெரிந்திடும் விதியாம்

தொழிலினில் மேல்கீழ் அறத்தினைப் பொறுத்து

தொழுகையின் மேல்கீழ் வரத்தினைப் பொறுத்து

பொறுமையின் மேல்கீழ் இனத்தினைப் பொறுத்து 

பெருமையின் மேல்கீழ் முடிவினைப் பொறுத்து 



Thursday, 17 November 2022

தாய்மையும் அனாதையும்

ஆண்கள் தவறிழைத்தாள் வமிசம் தலைகுனியும்   

பெண்கள் தவறிழைத்தாள்  நாடே தலைகுனியும். 

தவறிழைத்த ஆண் தப்பி விடலாம் .

 தவறியவளோ சுமந்தாக வேண்டும். 

தாய்மை தரமில்லா  வீட்டில் சேய்கள்  நாசமாகும். 

வாய்மை வரமில்லா நாட்டில் வாழ்வே நாசமாகும்

குப்பை தொட்டிகள்  தொட்டில் களானால் 

கருப்பை சுமப்பதற்கு   காரணம் குழந்தையா ?  

அனாதைகளுக்கு தெரியும் இதன் வலி.

துறவு

தாயின் துறவு சமைப்பதில்

தந்தை துறவு  வளர்ப்பதில்

நதியின் துறவு  நகர்வதில்

விதியின் துறவு நிகழ்வதில்


காற்றின் துறவு கடப்பதில்

நாற்றின் துறவு  விளைவினில்

சோற்றின் துறவு செரிப்பதில்

கூற்றின் துறவு   சேர்ப்பதில்


பகலின் துறவு  உழைப்பதில்

இரவின் துறவு  களைப்பதில்

உறவின் துறவு  மதிப்பதில்

உணர்வின் துறவு  வலிப்பதில்



முகிலின்   துறவு  வானத்தில்

துகிலின்  துறவு   மானத்தில்

தலைவன்  துறவு தியாகத்தில்

தவிப்போர் துறவு சோகத்தில்



Monday, 14 November 2022

கீதம் தேச ஒற்றுமை

பிரிவினையை தூண்டுவது  யாரோ ?

பிழையாக மண்ணில் பிறந்தாரோ ? 

விளையாட்டு வினையாகு மறியாரோ 

தலையாட்டி பொம்மை களைப்போலோ ?  


நல்லவிதை ஊன்றுவதை விட்டு

நஞ்சுவிதை தூவுவது பாவம்

கள்ளமன மானதுடன் வஞ்சம்

கட்டிபிடித்தாளுவது சாபம்

குள்ளநரி போலவரும் துரோகம்

குலைத்துவிடும் நாட்டுவளங் காணீர்

சொல்லவரும் தீர்ப்புகளைப் பாரீர் 

சுதந்திரமா தந்திரமா கேளீர்   ( ) 


நற்புத்தி செயலுறுவை விட்டார்

நயயுத்தி களைவெளியில் போட்டார்

மண்நலத்தை காப்பதுபோல் நஞ்சை

தன்நலத்தை சேர்ப்பதிலே சிந்தை

தர்மம் அறம் வாழ்வுநெறி

எல்லாம்

தங்கிடவே ஒன்றுபட வாரீர்  ( )

கீதம் கண்ணனை

 கீதம் 

ராகம்  முகாரி

தாளம்  ஆதி

(சத்தியமணி)


கண்ணனைத்  தேடுகிறாள்  ராதை 

காதலினால் படும் துய   ருடன் அவதியில் (  )


கண்ணமெலாம் ஈரம் இமைகளிலே சோகம்

இன்னுமேன் உயிரென்று பிதற்றிடும் மனதோடும்  (  )


இனிமையில் பலநினைத்து அலங்கரித்த கோலம்

தனிமையில் தலைகுனிந்து அவதியுறும் நேரம்

தெரிவதெலாம் ஆயனின் பிம்பென்ற போதும்

துடிதுடித்து மாயனை சிறைபிடிக்க தோன்றும்   (  )

Saturday, 12 November 2022

அழிக்கவா நரசிங்கா

 குற்றமே கொற்றமாய் கொலைகளவு உற்றமாய் 

சுற்றமே கொள்ளையாய் கொடுஞ்சொற் பயிலுமாய

விற்றுமே வீணராகி நாட்டையே துண்டுபடும்

புற்றுநோய் கிருமியரை

அழிக்கவா நரசிங்கா.   


சாரியாய் பொய்கள்பல சாற்றுவார் பயிலநித்தம்

வாரியும்  வசனமாயம்

வஞ்சினைக் காட்டசுத்தம்

காரியும் உமிழ்ந்தும்பிச்சை

காசுக்காய் துரோகமிட்டார்

மாரியாய் பிளந்தசுரர்

அழிக்கவா நரசிங்கா


சேருவார் இடமும்தீதே

பேசிடும்   பொருளுதீதே

கூறுவார்  கூற்றுதீதே

கொள்கையோ கொடுமைத்தீதே

மீறுவார் அறமும்தீதே

மெய்யதன் தொழிலும்தீதே

போறும்வா பிளந்துவா

அழிக்கவா நரசிங்கா

காஞ்சிமகானடி விண்ணப்பம் ( சத்தியமணி )

 கலியோடு வாழும்நிலை களைப்பாகும் வாழும்நெறி

வலியோடு அந்தணர்தம்

மனந்தனை துன்புறுத்தும்

பழியோடும் ஆட்சியறம்

பலியாகும் ஆகமங்கள்

விழியோடும் வேதனையை

விரைவாகத் தீர்ப்பாயோ

    வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ     1/5

பரிகாசம்  பலசெய்தும்

சதிகாரம்  சில எய்தும்

நிகழ்கால தரும்துன்பம்

எதிர்காலம் புரியாமல்

மறையோதி வருமைக்குள்

வைதீகம்  தர்ப்பையுடன்

இருப்போரின் வாழ்வழிக்க

அறநிலை  அழவைக்கும்

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ ..  2/5

பொருமையும் பிறப்புணர்ந்து

அருமறைகள்  தினமொழிய

முக்காலம்   கதிரவனின்

வந்தனம் செய்பவர்க்கு

இக்காலம் பெருஞ்சுமையா

ஆக்குவதும் அறமாமோ

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ    3/5

கோயில்கள்  மூலவரின் 

அணிகலனும் களவுபெறும்

வாயில்வரும் உற்சவரின்

சிலைகளுமே  மாறிவிடும்

ஆகமமும்   நியம்பங்களும் 

தர்மங்களும் கேலியுரும்

  வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ  4/5


பொய்யெலாம் பலதிரித்து  பொறுமைக்கு  வலிகொடுத்தார்

கையெல்லாம்  கறைபடித்து  ஆன்மீகம்  பலிகொடுத்தார்

வைதாலும் அமைதியென  இருப்பவரை வதைத்தார்   

யாகத்தில்  வளர்நெருப்பை  வயிற்றினில்  எரிவதுவோ 

வாஞ்சையில் கடைவிழி திறந்து

அருளோடும் காமாட்சியே பாராயோ

காஞ்சிபுரத்து காமகோடி நிலத்து சந்திரசேகர  குருவே   கேளாயோ   5/5