கலைவாணி பதிகம்
(சத்தியமணி)
ஆசிரியவிருத்தம்
இதந்தரு மனதில் வந்தாய் இடர்தனை கலைந்து விட்டாய்
சுதந்திர இசையும் தந்தாய் சுரங்களை வகைகள் சொன்னாய்
மதந்தரு புகழும் எந்தாய் மகிழவும் வளரும் உன்றன்
பதந்தரு மகிமை என்னே பாரதி பரவும் நின்றே......1
ஆனந்த வடிவழகே அகிலாண்ட தேவி அற்புதமே தவவடிவே பேரறிவே மேவி
வானத்து வெண்மதியே வைகறையே தூவி வேய்ந்திட்ட தாரகையர் பதித்த கூரை
மோனத்து பொருளாகி சிந்தைக்குள் ஊறி அமுதாகும் தேவதரு மரமேநல் பாட
கானத்து கருகுயிலே பச்சைக்கிளி பிள்ளை என்னிருதோள் அமர்ந்தருள முத்தமிழாய் ஆள.....2

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்