திருவோணம்
சத்தியமணி 07 09 22
சிறு பாலன் சிரிப்போடு வருகின்றபோது
அடங்காத இன்பம் வரும் அதைமறைக்க முடியாது
சிறு கரங்கள் ஓர்குடையும் நீர்க்குவளை யோடு
இருக்கென்ற அழகுக்கு கொடுத்தும் குறையாது ( )
மறையோதும் சிறுவனென வரும் மாயன் அரியாம்
குறையேதும் இல்லாமல் பலியசுரபதியாம்
தவமியற்றும் வாமனனின் மூன்றடிக்கு தானமென
தன்முடியும் பணிந்தானே
பலியால் திருவோணம் ()
தெருவெங்கும் மலராலே
மணக்கோலம் போட்டு
திருவோணப் பலியவரை
வரவேற்கும் பாட்டு
சரணடைந்தார்க் கென்றும்
அருள்முக்தி நலம்கூடும்
நாராயணா வென்றே
கொண்டாடும் மலைநாடும் ()

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்