செந்தூர நாமமிட்ட
நெற்றியுடையோன் பாரதி
வெற்றிடம் வைப்பதிலை
சந்தங்கள் தாளமிட
சங்கதிகள் தந்தோன்
தன்மானம் விட்டதிலை
வாழ்கையில் வறுமையில்
வாடியவன் பாரதி
உண்டியல் குலுக்கவில்லை
செந்தமிழ் தேனென்று
சொன்னாலும் இந்துஸ்தான்
என்பதை மறுக்கவில்லை
பாரதபூமி பழம்பெருநாடு
நீரதன் புதல்வரென்றான்
நிச்சயம் பிரிக்கவில்லை
சிந்தைக்குள் சுதந்திர
வேட்கை வெடித்தான்
சுயநலம் சேர்க்கவில்லை
எந்தையும் தாயும்
வளர்த்த மண்ணென்றான்
அரியணை பதுங்கவில்லை
முண்டாசு கட்டியும்
பத்திரிக்கை பதிப்பித்தான்
பொய்களை பரப்பவில்லை
சாதிகள் இல்லையென
சொல்லியே வாழ்ந்தவன்
சான்றிதழ் செப்பவில்லை
எல்லோரும் ஓரினம்
என்றிவன் பார்ப்பனன்
என்பதால் மதிப்புஇல்லை
போதனை தந்தவர்க்கு
புகலிட மானவன்
வேதனை தந்தில்லை
எம்மதக் கடவுளும்
வேண்டுக துணையென்ற
போதிலும் பழிக்கவில்லை
நன்றதை சொல்வதும்
நயமுற சொல்வதும்
இவனைப் போல் பாரிலிங்கே
இருக்கிற கவிஞரின்
பெயர்விட்டு பாராட்டும்
தினமலர் பிரதியுமிங்கே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்