Saturday, 22 October 2022

அரசாண்மை

குறட்டாழிசை     

தன்தாயை மறந்தான் பிறர்தாயை இகழ்ந்தான்

முன்னுக்கு முட்டாளாய் சேய்....1

கையிழந்தச் சிற்பியோ கருவிழந்த தாய்மையோ

மெய்யிழந்து உயிரிழந்த மொழி...2


இருட்டையே விரட்டினேன் விடியலாய் என்றபின்

குறட்டையும் விட்டான் பார்........3


இந்தியை விட்டால் ஆகாதோ பணத்தாளைக் 

கையாலே எரித்து விடு.......4

மந்தையில் கேளாமல் ஆடுகள் அறிந்ததே

சந்தையில்  புலாலறி வாளே.....5

தன்தாய் வெறுப்பான் பிறர்தாய் விரும்பானே

முன்செய் பாவத்து  பலன்......6

இந்தியை அறிந்தால்  ஊடகமும் முடங்குமென

பந்தியில் வைத்தார் களி......7

திரைப்பட வசனமல்ல காமுகன்  கைகளல்ல

சிறைப்பட பாரதத் தாய்.......8   


ஆமையும் முயலையும் வெல்லும் முயலாதார்

ஆணவம் தோல்வியைத் தரும்...9

காக்கும் இதயமே கழிவுக்கும் உடன்படின்

தாக்குமே உடலின் உயிரங்கே

வீழாதோ

நாக்கும் பண்பட நயம்பட பொய்யாயின்

ஆக்கும் ஆட்சியும் பாழ்


விடியல் விடியலென விடியாது இருக்கவே

குடியில் கிடந்தார் மண்

அரங்கின் அந்தரம் பேரணிய னுமதித்த

மன்றமே  வீழ்ச்சிக்கு விதை

வருந்தாத மழையும் வடியாத வெள்ளமும் 

திருந்தாத அரசர்க்கே அறி

தாயீன்ற மண்ணும் தாயுதிர்ந்த மொழியும்

பேயென்ற வனுக்கோ சிலை

அசிங்க மொழிகளும் ஆபாசப் பேச்சுகளும்

புசிக்க  கொல்லும் விடம்


அறிவெனில் ஆக்கங் காணலே மாற்றாக

தவறுகள் மறைத்த லன்று

தவறுகள் உணர்ந்து திருத்தம் செய்தலும்

அரசர்க்கு அரியணை காப்பு

சபைகளில் அறமறந்து கெட்டவை பேசுவானே

அரசனையே கொல்லும் விடம்

பெற்றோன் புகழ்தனில் பிள்ளைகள் வாழ்தலும்

குற்றமே பெருக்கும்  காண்

வஞ்சகக் கொலையோடு களவுசெய் தார்கூட்டு

நஞ்சினிலே உன்குலமும் கெடும்

வற்றிய குளத்திலே தூண்டில் விடுவான்

குற்றம் புரிவான் ஆட்சி

முன்வினை பயனறுக்க தீவினையும் காக்கும்

பின்வினைப் பிறவிகள் சுடும்



உண்மைகள் வெளிவர வெளிவர கேடுதரும் வண்மைகள் சிதைக்குள் பொடி 

குற்றத்தை கண்மூடி மறைத்தல் குருடரின்

சுற்றத்தில் நிகழ்ந்த போர்

சமதர்மம் அழிக்கவே சந்ததிகள் வளர்த்தினி

சாம்பலாய் போவதும் காண்

மடையர் துதிபாட வஞ்சகர் புடைசூழ

விடைபெற காலமும் இதே

கற்சிலை முச்சந்தி மகிமையா மாமகிமை

உற்சவ மூர்த்திக்கு உண்டு

ஆள்பவன்  மடமைக்கு அஞ்சாது காலம்

ஆண்டவன் வெகுண்டால் பலி

தோண்டத் தோண்டவே தூண்டுமே களவுதொழில்

மீண்டுமோ அடக்குவார் யார்

குழிகள் குண்டுகள் அகப்பட்ட சாலைக்கு

வைத்தாரே தலைவர் பெயர்

தவறிலை என்றாய் தப்புகள் செய்வார்

உடலிலே உறவிலே பிணி

பலநாள் ஏய்தது பார்த்து சேர்த்தது

பாவத்தால் ஒருநொடி  கெடும்







எந்த கேள்விக்கும் எந்த பதிலுக்கும் இருமுகமுண்டு. சரியானவர்க்கு  சரியாகவும் தவறானவர்க்கு தவறாகவும் தெரியும்.  ஆனாலும் கேள்வி எய்பவன்  தகுதி,  அறிவுநிலை , காலம், இடம், நோக்கம், தொடர்ச்சி ஆய்ந்தபின்  செயலா (பார்த்தன்),சொல்லா(கண்ணன்),புரிதலா(பீஷ்மர்), மெளனமா (திருதிராட்டன்),விலகலா (விதுரன்),  வர்ணனை (சஞ்சயன்),  பின்னோட்டம் ( வியாசர்) ஆக நம்முள்ளம் இயங்கும்



அரசின் சிறப்பு

வெண்பா ... சத்தியமணி


ஆங்கார பேச்சுகளும் ஆணவத்து ஆட்சிகளும்

நீங்காத துன்பதுயர்  தந்திடுமே  மாதிரியே

தேங்காயின் வெண்பற்கள்  வீதியிலே வீணாகும்

பாங்குறுமோ நோய்க்கே வழி.......1


வேலாகி நேர்நின்றே  வில்லாகி  நாவளைந்தே

வாளாகி  கூர்நின்று   பாம்பாகி  சீறிவந்தே

சேலாகி  துள்ளிடவே  தீயாகி  ஆர்ப்பரிக்க

ஆலாகி   காத்திடவே ஆள்....2


உற்றாரைக் கோணாமல் ஊரார்சொல் கேளாமல்

போற்றோரை வீடுவிட்டு பேதமில்லா  நோகாமல்

கற்றோரை வாட்டாது  கள்வரினை சேர்க்காது

குற்றமிலா ஆதிநெறி காண்....3


இனங்களையும் காழ்ப்புணர ஆன்மீகம் காணும்

மனங்களையும்   ஏளனமாய்  வார்த்தைவிட பாவம்

சனங்களையும்  சன்மார்க்க  சாதிகளை நோவும்

தினங்களைக் காண்பதே  தீது......4


வெண்கலிப்பா


மதத்தையும் மோதவிட்டு சாதிகளும்  மோதவிட்டு

நிறத்தையும் மோதவிட்டு  சினத்தையும் ஏவிவிட்டு

சகத்தையும்  கூறுவிற்று மொழியினை வாரிவிற்று

அகத்தையும்  விலைக்கு  விற்றார்...5

வெண்டுறை 


உப்பளம் ஊறிவிட்டு உவர்ப்பில்லை என்பாராம்

தப்பெலாம் தேறிவிட்டு தற்பெருமை செய்வாராம்

முப்பெரும் வேந்தரை சனாதனம் இலையெனல்

குப்பையை ருசித்த  பரி





No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்