Saturday, 28 October 2017

பெண்ணே பெண்ணே!!

பெண்ணே பெண்ணே சிரிக்காதடி
சிரிச்சா நெஞ்சு பொறுக்காதடி
மானேத் துள்ளி மறையாதடி
மயிலாய் ஆடியே மயக்காதடி ( )
சிற்றலையின் பாடலிங்கே சிணுங்காதடி
நற்றிணையின் கள்ளளித்து நழுவாதடி
கற்றாழைப் போல்கசந்து வழியாதடி
வெற்றிலைச் செஞ்சாந்தை உமிழாதடி()
அம்மா என்றாலும் அலட்டாதடி
அக்கா என்றாலும் மிரட்டாதடி
கண்ணே என்றாலும் கசக்காதடி
முன்னே வந்துசும்மா முணுகாதடி()
நுங்கப் பாக்கமுன்னு நினைக்காதடி
இங்கப் பாருங்கன்னு இடிக்காதடி
தங்கம் வாங்கச்சொல்லி விக்காதடி
திங்க முடியாமத் திக்காதடி()

உரிமைச் சொல்லிடவே முழங்காதடி
அடிமை யாக்கிடவோ அலுக்காதடி
பொறுமை கற்றுயெனை பொசுக்காதடி
பெருமை சொல்லிசொல்லி அணைக்காதடி()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்