Saturday, 28 October 2017

காதலர் தினம்



காத்திருந்து வந்ததிந்த காதலர் தினம் – தினம்
காத்திருந்தும் வரவில்லை கண்ணனின் மனம்
பூத்திருந்து புன்னகைத்த கோதையின் முகம்
பொங்கி அழும் முன்னாலே ஊடலில் சுகம்
சீண்டி விளையாடுவதில் இன்னும் சிறுபிள்ளை
சண்டி தனமத்தனையும் பண்ணும் பெரும்தொல்லை
என்ன செய்ய காதலிலே கட்டி விட்டான் மெல்ல‌
ஏக்கமுடன் காத்திருக்க வைப்ப‌தையோ சொல்ல
தாமதமாய் வந்தவுடன் கண்ணடிப்பான் கொஞ்சம்
கீதமழைப் பெய்யும் குழல் கீர்த்தனைகள் மிஞ்சும்
ஊடலுக்கு மெய்யும் பொய்யும் ஓயாமல் கெஞ்சும்
ஒட்டு மொத்தமாய் கேட்டு கூடலுக்குள் தஞ்ச‌ம்

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்