Saturday, 28 October 2017

கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!

கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
கண்ணீரில் அவர்கள் ! கைகட்டி இவர்கள் !!
தண்ணீரில் சட்டம் !!   டைகட்டி திட்டும்  ??
புதுமைப் பெண்டிர் புகழ்சொன்ன பாரதி
புலம்பி அழுவதை எத்தமிழர் கேட்டனரோ
பசும்பொன் புன்னகை ததும்பிடும் காந்தி
விசும்பல் ஒலிகூட உம்காதில் சேராதோ
இப்போது இந்நாளில் இனிமேலும் குறைவது
பாதுகாப்பு பண்பாடு குலநீதி நற்குணமே
எப்போது எந்நாளில் இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே கேடாகும்
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்