Saturday, 28 October 2017

ஓட்டுப் போடப் போனார் … (காற்று வாங்கப் போனேன்……மெட்டு)

ஓட்டுப் போடப் போனார்   வெறும்
ஓட்டைப் போட்டு வந்தார்
நாட்டை காக்கவில்லை வரும்
கேட்டைப் பார்க்கவில்லை   ()

வேட்டையாடும் கூட்டம் பல‌
கூட்டைத் தேடி கூட்டும்
கோட்டை தாண்டி நோட்டம் லஞ்ச‌
நோட்டை எண்ணி நீட்டும்
ஏட்டில் தந்தக் கல்வி பலி
யாட்டை யாக்கும் பள்ளி
வீட்டைக் காக்கவில்லை எனில்
நாட்டைக் காக்க வருமோ  ()

திண்ணும் விலையும் ஏறும் வீட்டு
மண்ணின் விலையும் ஏறும்
தேவை வரியும் ஏறும் அதற்கு
சேவை வரியும் ஏறும்
தேர்தல் முன்னர்  ஒன்று கூட்டு
தேர்தல் பின்னர் மாறும்
மக்கள் ஓட்டில் இல்லை ஆட்சி
குதிரை பேரம் போகும்  ()

சின்னம் பார்த்து போட்டால் அது
பின்னமாகி போகும்
முன்னத் தேர்தல்போல இதுவும்
உஞ்சலாட்டம் போடும்
முதுமை நினைக்கும் யூகம் துள்ள‌
இளமை நினைக்கும் மாயம்
மடமைத் தனத்தில மீண்டும் வாக்கு
உரிமை சகுனி தாயம்()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்