Saturday, 28 October 2017

வெற்றி பெறலாம் தோற்றும் விடலாம் (ஆடவரெல்லாம்…மெட்டு)

சத்திய மணி
(இது வேட்பாளர்களுக்கான தேர்தல் கீதம்)
வெற்றி பெறலாம் தோற்றும் விடலாம்
இருந்த போதும் ஆட்சி பெறலாம்
சீட்டு கிடைக்க நோட்டு தரலாம்
நீட்டி மடக்கி போற்றி விடலாம்
எங்கும் சென்று போட்டியிடலாம்
எதுவும் சொல்லி வாக்குபெறலாம்
வாக்குபெறலாம்      ()
ஊழல் ஒழிப்போம் உரக்க சொலலாம்
உண்மை ஆட்சி தருவோம் எனலாம்
ஏற்றம் இலவச வார்த்தை விடலாம்
மாற்றம் தேவை அறிவீர் எனலாம்
மயக்கம் தரலாம்       ()
சேவை எங்கள் கொள்கை யெனலாம்
தேவை யென்று எதுவும் பெறலாம்
ஊழல் அறியா வேடம் இடலாம்
கட்சி பார்த்து தாவி விடலாம்
பதவி பெற‌லாம்           (  )
குடும்பத்தோடு சுற்றி வரலாம்
பாசத்தோடு பதவி பெறலாம்
கூட்டு ஆட்சி லாபம் எனலாம்
கேட்டு மக்கள் வாக்கு தர‌லாம்
மீண்டும் வரலாம்        ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்