Saturday, 28 October 2017

பொங்கிடு பாரதமே!



தாமரைப் பூக்களுக்கு சன்மானம் கற்பழிப்போ ?
காமனின் பாவத்திலே தன்மானம் வழிபறிப்போ ?

சேமங்கள் தரும்மாதர் குலத்துக்கோ இத்துன்பம் ?
சன்மங்கள் தரும்தாயின் பெண்மைக்கோ இத்துயரம் ?

வன்மங்கள் வீழாதோ வஞ்சகமும் சாகாதோ ?
தன்மக்கள் பாழாதல் அரசாங்கம் தகர்க்காதோ?

என்னக் கொடுமையாடா எதனைச் சொல்லிடுவேன் ?
உண்ணச் சோறில்லை ஒழுக்கமும் ஊணில்இல்லை?

கர்மத்தின் பலியென்றின் கடவுளுக்கும் வலிக்காதோ ?
பார்த்து இருப்பதுவும் பாரதப் பண்பாடோ?

பொறுத்தது போதும் பொங்கிடு பாரதமே – இந்நிலை
கொடுத்தவர் கெடுத்தவர் கூட்டம் வீழ்த்திடுமே

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்