இனிய மின் இணையத் தோழர்களுக்கு வணக்கங்கள். பொழுது போக்காக எழுதியவற்றை இங்கே பதிப்பித்துள்ளேன். படியுங்கள்.ரசியுங்கள். உங்களின் உள்ளே கிடைத்த எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களின் ரசனை அறிந்து என்னால் இன்னும் சமர்ப்பிக்க முடியும். இது தான் அபிமான ரசிகர்களுடன் ரகசியமான ஒப்பந்தம். சரியா ? நன்றி. வாழியத் தமிழ் ! வளர்க பாரதம் !
Pages
- Home
- யாரிவன் [ Who is this ]
- கர்ப்பித்த கவிதைகள் [ Poems from Her blessings ]
- கிறுக்கல்கள் [ Cartoons by hand and digital ]
- இசையும் நமக்கு அசையும் [Piano Melodies ]
- மனமுதிரும் மொழி ( Language of the Heart )
- ஆத்மனின் பயணம் ( Upasana a Spiritual Journey )
- ஜோதிடம் நடைமுறையில் அணுகுமுறை [ Astrology - Practical Approach ]
Saturday, 28 October 2017
பொங்கிடு பாரதமே!
தாமரைப் பூக்களுக்கு சன்மானம் கற்பழிப்போ ?
காமனின் பாவத்திலே தன்மானம் வழிபறிப்போ ?
சேமங்கள் தரும்மாதர் குலத்துக்கோ இத்துன்பம் ?
சன்மங்கள் தரும்தாயின் பெண்மைக்கோ இத்துயரம் ?
வன்மங்கள் வீழாதோ வஞ்சகமும் சாகாதோ ?
தன்மக்கள் பாழாதல் அரசாங்கம் தகர்க்காதோ?
என்னக் கொடுமையாடா எதனைச் சொல்லிடுவேன் ?
உண்ணச் சோறில்லை ஒழுக்கமும் ஊணில்இல்லை?
கர்மத்தின் பலியென்றின் கடவுளுக்கும் வலிக்காதோ ?
பார்த்து இருப்பதுவும் பாரதப் பண்பாடோ?
பொறுத்தது போதும் பொங்கிடு பாரதமே – இந்நிலை
கொடுத்தவர் கெடுத்தவர் கூட்டம் வீழ்த்திடுமே
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
கண்ணீரில் அவர்கள் ! கைகட்டி இவர்கள் !!
தண்ணீரில் சட்டம் !! டைகட்டி திட்டும் ??
புதுமைப் பெண்டிர் புகழ்சொன்ன பாரதி
புலம்பி அழுவதை எத்தமிழர் கேட்டனரோ
பசும்பொன் புன்னகை ததும்பிடும் காந்தி
விசும்பல் ஒலிகூட உம்காதில் சேராதோ
இப்போது இந்நாளில் இனிமேலும் குறைவது
பாதுகாப்பு பண்பாடு குலநீதி நற்குணமே
எப்போது எந்நாளில் இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே கேடாகும்
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
கண்ணீரில் அவர்கள் ! கைகட்டி இவர்கள் !!
தண்ணீரில் சட்டம் !! டைகட்டி திட்டும் ??
புதுமைப் பெண்டிர் புகழ்சொன்ன பாரதி
புலம்பி அழுவதை எத்தமிழர் கேட்டனரோ
பசும்பொன் புன்னகை ததும்பிடும் காந்தி
விசும்பல் ஒலிகூட உம்காதில் சேராதோ
இப்போது இந்நாளில் இனிமேலும் குறைவது
பாதுகாப்பு பண்பாடு குலநீதி நற்குணமே
எப்போது எந்நாளில் இவையாவும் சீராகும்
தப்பொன்றை காணாமல் இருந்தாலே கேடாகும்
கேளாயோ பாரதமே ! கேளாயோ செவிமடுத்தே !!
மகாத்மா காந்தி அஞ்சலி
காந்தியின் இதழ்கள் விரிந்திடும் பணத்தாள்களில் தாம்பதிந்ததால்
காந்தியின் இமைகள் கலங்கிடும் கள்ளநோட்டுகளிலும் பதிந்ததால்
காந்தியின் இதயம் களித்திடும் புதுமைமங்கையர் சிறப்பினால்
காந்தியின் இதயம் அழுதிடும் அவநிலையில்பெண் நிகழ்வினால்
காந்தியின் உள்ளம் நிறைந்திடும் இந்தியஅறிவின் பெருமையால்
காந்தியின் உள்ளம் உடைந்திடும் ஊழல்வஞ்சனைப் பெருக்கினால்
காந்தியின் கால்களும் குதித்திடும் அரிசனங்களின் வளர்ச்சியால்
காந்தியின் கால்களும் வலித்திடும் வரிசரங்களின் சுமையினால்
காந்தியின் கரங்களும் உயர்ந்திடும் உலகில்பாரதப் புகழினால்
காந்தியின் கண்களும் அழுதிடும் அரசியல்தரத்தின் மலிவினால்
காந்தியின் ஆத்மா வியந்திடும் இளையபாரத துடிப்பினால்
காந்தியின் சாந்தி விசும்பிடும் தருமநெறிகளின் தளர்வினால்
ஹே ராம் ! ஹே ராம் !
பரமாத்மா இருப்பாரோ இல்லையோ
மகாத்மாவை கண்டோம் பாரதமே
வாழிய !! வாழிய !!
காதலர் தினம்
காத்திருந்து வந்ததிந்த காதலர் தினம் – தினம்
காத்திருந்தும் வரவில்லை கண்ணனின் மனம்
பூத்திருந்து புன்னகைத்த கோதையின் முகம்
பொங்கி அழும் முன்னாலே ஊடலில் சுகம்
பூத்திருந்து புன்னகைத்த கோதையின் முகம்
பொங்கி அழும் முன்னாலே ஊடலில் சுகம்
சீண்டி விளையாடுவதில் இன்னும் சிறுபிள்ளை
சண்டி தனமத்தனையும் பண்ணும் பெரும்தொல்லை
என்ன செய்ய காதலிலே கட்டி விட்டான் மெல்ல
ஏக்கமுடன் காத்திருக்க வைப்பதையோ சொல்ல
சண்டி தனமத்தனையும் பண்ணும் பெரும்தொல்லை
என்ன செய்ய காதலிலே கட்டி விட்டான் மெல்ல
ஏக்கமுடன் காத்திருக்க வைப்பதையோ சொல்ல
தாமதமாய் வந்தவுடன் கண்ணடிப்பான் கொஞ்சம்
கீதமழைப் பெய்யும் குழல் கீர்த்தனைகள் மிஞ்சும்
ஊடலுக்கு மெய்யும் பொய்யும் ஓயாமல் கெஞ்சும்
ஒட்டு மொத்தமாய் கேட்டு கூடலுக்குள் தஞ்சம்
கீதமழைப் பெய்யும் குழல் கீர்த்தனைகள் மிஞ்சும்
ஊடலுக்கு மெய்யும் பொய்யும் ஓயாமல் கெஞ்சும்
ஒட்டு மொத்தமாய் கேட்டு கூடலுக்குள் தஞ்சம்
அறுபடை ஆண்டோன் துதி
ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா
உணர்த்திய சுவாமிநாதா
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாளும் பழனிபாலா
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா
நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே
குன்றேறி குளிர்ந்தகுமரா
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே
காதற்களம் வெல்ல
காமனின் பாலுக்கு வள்ளுவத்தை யாசி
காதலின் பாலுக்கு கம்பன்வரி யோசி
வாமனன் போல்வளரும் வஞ்சிச் தமிழ் பேசி
தாமதமின்றி பெரும் சிந்துகவி வாசி
காதலின் பாலுக்கு கம்பன்வரி யோசி
வாமனன் போல்வளரும் வஞ்சிச் தமிழ் பேசி
தாமதமின்றி பெரும் சிந்துகவி வாசி
காதலுக்கு சாதியில்லை கண்ணதாசன் கூற்று
காதலுக்கு வார்த்தையில்லை வைரமுத்து பாட்டு
காதலுக்கு மாயமென்று வாலிசொல்ல கேட்டு
காதலுக்கு பாடற்சொன்னோர் கோடியிங்கு கூட்டு
காதலுக்கு வார்த்தையில்லை வைரமுத்து பாட்டு
காதலுக்கு மாயமென்று வாலிசொல்ல கேட்டு
காதலுக்கு பாடற்சொன்னோர் கோடியிங்கு கூட்டு
கற்பனையில் வந்ததெல்லாம் காதற்கலையல்ல
விற்பனைக்கு தந்ததெல்லாம் காதற்நெறியல்ல
அற்பதனம் கவர்ச்சிகளும்! காதற்குற்றமல்ல
நற்பதமே காதலறம்! காதற்களம் வெல்ல
விற்பனைக்கு தந்ததெல்லாம் காதற்நெறியல்ல
அற்பதனம் கவர்ச்சிகளும்! காதற்குற்றமல்ல
நற்பதமே காதலறம்! காதற்களம் வெல்ல
பிரபஞ்ச மண்டலமே
பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்
எதற்காக கல்லெறிந்து எங்களை தாக்குகிறாய் ?
எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
இருந்தும்
பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
இருந்தும்
பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
பெண்தான்! பெண்மை வாழியவே!!
மாமியாரை அன்னையென அணைப்பதுவும் பெண்தான்
மாமியாரை இல்லம்விட்டு விலக்குவதும் பெண்தான்
மருமகளை தன்மகளாய் மதிப்பதுவும் பெண்தான்
மருமகளை மாடெனவே மாற்றுவதும் பெண்தான்
தமக்கையின் தங்கையென வாழ்வதுவும் பெண்தான்
தமக்கையின் உழைப்பினிலே தள்ளுவதும் பெண்தான்
மகளென்ற போதும்மகன் கடமைதரும் பெண்தான்
மகளென்று சொத்துரிமை நாடுவதும் பெண்தான்
மனைவியென துணைபுரிய மின்னுவதும் பெண்தான்
மனைவியென மற்றொருத்தி வாழ்க்கையிலும் பெண்தான்
அழகான அணிகளோடு அணிவகுப்பும் பெண்தான்
அரைகுறை ஆடைகளில் விளம்பரமும் பெண்தான்
ஆண்களினம் பெற்றோனாய் ஆக்குவதும் பெண்தான்
ஆண்களினக் கொடுமையிலே அழிவதுவும் பெண்தான்
முன்வரியில் சக்தியென பெண்பெருமை பேணட்டும்
பின்வரிசை பாவமெலாம் திருந்தநிலை மாறட்டும்
பெண்களினம் பெண்மைதனைப் புரிந்துநடை போடட்டும் !
பெண்களினம் பொன்மயமாய் புவியினிலே வாழட்டும் !!
பின்வரிசை பாவமெலாம் திருந்தநிலை மாறட்டும்
பெண்களினம் பெண்மைதனைப் புரிந்துநடை போடட்டும் !
பெண்களினம் பொன்மயமாய் புவியினிலே வாழட்டும் !!
கண்ணன் வாழி!வாழி!
குழலூதக் கலைகற்று கொடுப்பான் – கோதை
குழலாடும் பின்னேகி ஊதிக் கெடுப்பான்
பழகாத வித்தையோ காதல் – மாயன்
அழகாக விளையாடி போதைக் குடிப்பான்
தேமொழி தமிழ்பாடக் கேட்பான் – பாவைத்
தேனாழி அலையாட நீச்சல் அடிப்பான்
தூரிகை வண்ணம் எடுப்பான் – அதைப்
பேரிகை முழங்க ஓவியம் களிப்பான்
வெல்லமை யீட்டிடும் வித்தன் – எடுத்து
சொல்லமைத் தாடிடும் சித்தன்
வல்லமைத் தருகின்ற வரதன் – விசயன்
வில்லமைக் கும் கண்ணன் வாழி!வாழி!
குழலாடும் பின்னேகி ஊதிக் கெடுப்பான்
பழகாத வித்தையோ காதல் – மாயன்
அழகாக விளையாடி போதைக் குடிப்பான்
தேமொழி தமிழ்பாடக் கேட்பான் – பாவைத்
தேனாழி அலையாட நீச்சல் அடிப்பான்
தூரிகை வண்ணம் எடுப்பான் – அதைப்
பேரிகை முழங்க ஓவியம் களிப்பான்
வெல்லமை யீட்டிடும் வித்தன் – எடுத்து
சொல்லமைத் தாடிடும் சித்தன்
வல்லமைத் தருகின்ற வரதன் – விசயன்
வில்லமைக் கும் கண்ணன் வாழி!வாழி!
பஞ்சாட்சர கவசம்
நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
நமசிவாயமென இசையொழுக பாடினேன்
நமசிவாயமென மனமுருக ஓதினேன்
நமசிவாயமென குருமுகமே நாடினேன்
நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!
நமசிவாயமென மனமுருக ஓதினேன்
நமசிவாயமென குருமுகமே நாடினேன்
நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!
‘தேர்தலும் தேடுதலும்’ கவி யரங்கம் – 29-03-09 தமிழ் சங்கம் – தில்லி
தமிழ் வணக்கம்
குமரியாய் சிறக்கும் உன்னை யமுனையில் குளிக்கவைத்து
அழகியாய் அலங்கரித்து சங்க அரியணை அமர வைத்தோம்
கவிஞர்கள் கவரி வீசும் சபையினர் மகிழ்ந்து சேர்க்கும்
கரவொலி வாழ்க சொல்லும் தமிழுந்தன் ஆட்சி வெல்லும்
என்றும் எங்களுக்கு உன்னருள் ஆட்சிதானே
அவை வணக்கம்
பாலருந்த மொழி பேசும் தன் குழந்தைக் கண்டவள் போல்
பாசமுடன் பரவசமாய் கவி காணும் சபையோரே !
நேசமிகு நம்முறவு நெடிது வளர்கவென நிறை
வாசமிகு செந்தமிழால் வணங்கியான் வேண்டுகிறேன்
வாய்ப்பும் தந்தமைக்கு நன்றியுடன் தொடருகிறேன்
தொடக்கம்
கவிதைத் திருவிழா…கவி தைக்கு திருவிழா
உங்களுக்கு கவிதைத் திருவிழா…
எங்கள் கவிதைக்கு திருவிழா….
திருவிழாக் காணும் தெய்வம் தமிழ் அன்றோ
தேரெடுத்து வந்தாள் பக்தருக்கு படையலிட்டாள்..கவியமுதிற்கு
தேர்ந்தெடுத்தாள் ‘தேர்தலும் தேடுதலும்’ எனும் தலைப்பு..இனிப்பு
அதில் வாக்காளராய் எமைத் தேடச் சொன்னாள்
தேடியதைப் பாடச் சொன்னாள் பாடுகிறேன்.
உங்களுக்குத் தெரியுமா ஓருண்மை புரியுமா
கூட்டணியாய் இருந்தாலும் குணத்தாலே வாக்காளர்
வேற்றணியாய் கலந்தாலும் விதத்தாலே வாக்காளர்
வேட்பாளர் ஆயினும்தான் வேடத்தால் வாக்காளர்
கேட்பாளராய் இங்கு இருப்போரும் வாக்காளர்
தலைவர்கள் ஆனாலும் தகுதியால் வாக்காளர் – அரசு
அதிகாரி யெனும்போதும் அவரும் தான் வாக்காளர் – ஆக
ஏக மனதாக எல்லோரும் வாக்காளர் – என்பதனால்
எமக்காகத் தேடவில்லை ..நமக்காகத் தேடுகிறேன் – முன்
எல்லோரும் முன் மொழிந்தார் .யாம் மீதி பொழிந்தோம்
தேவைகள் தானே தேடவும் தூண்டும்…
தேடலும் பட்டியல் ஆனது மீண்டும்.
இதுவும் வாக்காளர் பட்டியல் தான்…
வாக்களிக்க தகுதி ( அரசு ) தரும் வாக்காளர் பட்டியல் அல்ல – வரும்
தேர்தலுக்கு வாக்காளர் தேடலுடன் தரும் வாக்காளர் பட்டியல்.
வாக்காளர்
தேடுவது முதலில் “தகுதிக்கான வாக்காளர் அட்டை”
தேடுவது அடுத்து “தொகுதிக்கான வாக்காளர் பட்டியல்”
தேடுவது தொடரும் “ஓட்டளிக்கும் வாய்ப்பை”
தேடுவது பிறகு ” தன் அணியின் ஆட்சி”……
சிரிப்பாக இருக்கிறது… சிந்திக்கவும் வைக்கிறது …என்றதனால்
வழிகாட்ட வணங்கினேன் தமிழ்ப் பெற்ற தாயை…
சூரிய விழிகள் ஈர்க்கும் ..தாமரை யிதழ்கள் பூக்கும்
காவிய இலைகள் சேர்க்கும் …கையினில் ஊன்றுகோலை
வீசிய படி நடந்தால்….யானையும் நின்று பார்க்கும் –
நொய்யையில் சீராட்டும் அவையிலே பாராட்டும்
பாட்டியே..தமிழ் மூதாட்டியே .அவ்வையே வந்தருள்க என்றபோது ..
இறைஞ்சினேன்…இறைச்சலெனக் கேட்டதுபோல் எதிரே
” நன்று நன்று என் பேரா….சத்தியா…உன் பேரா
இன்று சின்னங்களாய் எனைத் துதித்தாய்..எதர்க்கழைத்தாய் ? ”
“முழுதும் அறிந்தவளே மூதுரை மொழிந்தவளே – ஏதோ
கவியெழுத வாக்களித்தாய்…கருவேற்ற நோக்களித்தாய்
வாக்காளராக்கி தேடுவதால் ..இந்நிலமை..என் செய.
காண்பதெல்லாம் சின்னங்கள்…கேட்பதெல்லாம் வாக்குறுதி.
கருத்தாய்வு தேடுகிறேன்….தருவீரே.சிறப்பாக !”
என்றதுமே சிரித்தார்… இடைப்பட்டு உரைத்தார்
“அக்காலப் பாட்டிக்கு …இக்காலப் பேட்டிகள் ஏனப்பா?
வம்புக்கிழுக்காதே….போட்டிக்கு வயதில்லை..குடியரசில்
தேடுகின்ற மூவரைக் கேள்…முடிவிலே நீயும் சேர்…
தேவைகளைத் தீர்ப்போரின் ஆட்சிக்கு ஆதரவாய்”
என்றே இயம்பி விட்டு ஏட்டில் கலந்துவிட்டர்.
ஆசியுடன் ஆசையுடன் தேடப் புறப்பட்டேன்.
தில்லி நகர் வீதியிலே
ராஜபாதையிலே……ராஜபாத்திலே ….சாலைப் புழுதியிலே
வேதனையால் தேடிடுவாரிடம் தேடுகிறீர் யாது ?” என்றேன்
“தம்பி சாலைகளைத் தேடுகிறேன்……சரியாக்கி செல்லும்…”
“இருமருங்கும் சாலைகள் தானே”
“தேடுகிறேன் படிப்புக்கு வணிகம் செய்யாக் கல்விச் சாலைகளை
தேடுகிறேன் துடிப்புடனே உழைப்பு நல்கும் தொழிற்சாலைகளை
தேடுகிறேன் எதிர்காலம் வளர்க்கின்ற திட்டச்சாலைகளை
தேடுகிறேன் எப்போதும் நியாயம் தரும் நீதிச் சாலைகளை”
என் தேடுதலும் ஓயவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் நகர்ந்தபடி
ஜனப்பாதையிலே…ஜன்பாத்திலே… நெரிசலில் தள்ளாடும் மூதாட்டி
தனைப்பார்த்து தேடலுக்கு உதவிடவே துணை வரவா நான் என்றேன்.
பதிலாய்…”அகத்தைத் தேடுகிறேன் அறுபது வருடங்களாய்..
…அகத்தில் அல்லவா சுகம் தெரியும்……”
“அகம் என்றால்…..பிறந்தகமா புகுந்தகமா மகன் அகமா மகள் அகமா”
“ராசா….
தேடுகிறேன் இலவசமாய் சிகைச்சைத் தரும் மருந்தகம்
தேடுகிறேன் உரம் கொடுத்து ஊட்டம் தரும் விருந்தகம்
தேடுகிறேன் கற்றோர் சிறப்பு தரும் கருத்தகம் –
தேடுகிறேன் இந்நாட்டைப் பெற்றோர் யெனக்காக்கும் வித்தகம் ..
( தேடுகிறேன் பெற்றோர் தமைக் காக்கும் பிறந்தகம் )…
என் தேடுதலும் முடியவில்லை…..தேர்தலும் ஓயவில்லை…..என்றார் தளர்ந்தபடி
———-
“இந்தியா கேட்டதிலே ..இந்தியா கேட்டதிலே ….கேட்காமல் நான் நுழைந்தேன்….(ஆங்கில நுழைவுக்கு மன்னிக்கவும்)
படகோடும் நீரோடை…..தியாகவொளிப் பெருஞ்சுடர்
பசுஞ்சோலை காணாது …தேடலென்ன இளையவரே”
“தாரம் தேடுகிறேன்” என்றார் குனிந்தபடி
“முத்தாரமா…முதல் தாரமா…அன்றி….? நல்லிக்கோ…..அன்றி..பாளிகாவிற்கோ…நகர்ந்திருப்பாள்”
“நண்பா…..நான்
தேடுகிறேன் நாட்டினை வளரவைக்கும் பொருளாதாரம்
தேடுகிறேன் சுற்றுபுறம் பொளிரவைக்கும் சுகாதாரம்
தேடுகிறேன் கலாச்சாரம் ( அன்பைக்) கற்றுதரும் அருளாதாரம்
தேடுகிறேன் இல்லங்கள் களிக்கும் அன்பாதாரம்
என் தேடுதலும் தீரவில்லை…..தேர்தலும் ஓய்வதில்லை…..என்றார் விரைந்தபடி
நான்காவதாக நமது பங்குக்கு யாம்..
நெல்லைக் கொடுத்து ஜயத்தை நல்கும் காவிரி நீர்வரத் தேடுகிறோம்
எல்லை சேது பாலம் ஆகியோர் இணைக்கும் நட்பைத் தேடுகிறோம்
புதியவன் வந்தாரிணி ஆங்கே புலரும் நாளைத் தேடுகிறோம்
விதியெனக் கோரும் பசிப்பேய் வீழ்த்தும் சத்திய சோதியை தேடுகிறோம்
பகைவரெல்லாம் நண்பரென்றாக்கும் பக்குவ பாரதம் தேடுகிறோம்
பத்திரமாக நம்முயிர் காக்கும் பாதுகாவலரைத் தேடுகிறோம்
சக்தியெல்லாம் பெரும் சிக்கனப் படுத்திடும் யுக்த்தியாளனைத் தேடுகிறோம்
இந்திய நாட்டை ஏய்த்திடுவார் தமை பணிய வைப்பவரை தேடுகிறோம்
வறுமை நீக்கி பெருமைச் சேர்க்கும் வள்ளல் தம்மைத் தேடுகிறோம்
வலிமை யெல்லாம் வல்லமை ஆக்கும் இளையபாரதம் தேடுகிறோம்
கற்க கசடற குறள் நெறியின் வழி வள்ளுவன் தன்னைத் தேடுகிறோம்
கங்கைக்காவிரி இணைக்கும் பாரதி கனவு மெய்ப்படத் தேடுகிறோம்
தேடும் ஆட்சி நமக்கு கிடைப்பின் அது போல் ஏது மகிழ்ச்சியடி – தமிழே
தேர்தல் ஏமாற்றிவிட்டால் அதுவும் அனுபவ முதிர்ச்சியடி.
உனக்கும் தானிது புரியாதோ தேர்தலும் தேடலும் சுழற்சியடி – அதனால்
உனக்கு ஜயகோ ஜயகோ என்றே முடித்தேன் ! இதுவும்வோர் சிறு முயற்ச்சியடி.
பிழைப் பொறுத்து வாழ்த்தருள வணங்குகிறேன்…வாழியத் தமிழ்
வணங்குகிறேன் உங்களின் அன்புடன் சத்தியமணி ….
அணிந்தே ஆடடி “தீபாவளி”
வல்லமையாளர்களுக்கு எம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
பட பட பட்டாசு இடபுறம்
படபடப்புடன் பலர் வலபுறம்
வெடி வெடி வெடியென இடபுறம்
வெடியால் செவிடர்கள் வலபுறம்
புகைந்திடும் சூழல் இடபுறம்
இருமலில் இரைப்பவர் வலபுறம்
கலகலச் சக்கரம் இடபுறம்
கடனுக்கு கஞ்சி வலபுறம்
இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்
இயலாமையில் சிலர் மறுபுறம்
நரகாசுரர்கள் எதிர் புறம்
நாரணண் நம்பி நம்புறம்
குயவரின் விளக்குகள் எரிந்திடவே
கயவரின் இனங்களும் குறைந்திடவே
பிணிகளும் பேய்களும் நீங்கிடவே
அணிகளும் வாழ்த்தும் சேர்ந்திடவே
அன்புடன் இனிப்பாய் ! புத்தாடை
அணிந்தே ஆடடி “தீபாவளி”
என்றும் புரியா இரகசியம் !
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
கண்கள் விளம்பிய இரகசியம் – உன்
காதணி ஆடிய இரகசியம்
முறுவல் உதிர்த்த இரகசியம் – பின்
முணுமுணுத்த இதழ் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
காதணி ஆடிய இரகசியம்
முறுவல் உதிர்த்த இரகசியம் – பின்
முணுமுணுத்த இதழ் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
கால்கள் சிணுங்கிய இரகசியம் மென்
காலடி ஓசை இரகசியம்
மூச்சும் பேச்சும் இரகசியம் – வெண்
முத்து பற்கள் இரகசியம்
கருமை எழுதிய இரகசியம் – இமைக்
கற்றை வளைவதும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
அன்பாய் குழைவதும் இரகசியம் – உன்
அரவணைப் பெல்லாம் இரகசியம்
அடம்பிடி வாதமும் இரகசியம் – பின்
அடிமைப் படுத்திடும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
காலடி ஓசை இரகசியம்
மூச்சும் பேச்சும் இரகசியம் – வெண்
முத்து பற்கள் இரகசியம்
கருமை எழுதிய இரகசியம் – இமைக்
கற்றை வளைவதும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
அன்பாய் குழைவதும் இரகசியம் – உன்
அரவணைப் பெல்லாம் இரகசியம்
அடம்பிடி வாதமும் இரகசியம் – பின்
அடிமைப் படுத்திடும் இரகசியம்
என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
ஊழல் நாற்பது
இல்லறத்தில்
- கொட்டுகிற குழாய்களை நிறுத்த வேண்டாம்
- குடியிருப்பில் குப்பைகளை அகற்ற வேண்டாம்
- மின்சாரம் வீணடிக்க வருந்த வேண்டாம்
- அண்டை வீட்டு சண்டைகளை நிறுத்த வேண்டாம்
- அறிவுரைகள் என்று குட்டை குறைக்க வேண்டாம்
கல்லூரியில்
- சிகப்பு சிக்னல் விளக்குகளை மதிக்க வேண்டாம்
- சீக்கிரத்தின் த்ரில் ஸ்பீடு குறைக்க வேண்டாம்
- கட் அடித்து வகுப்பறைக்கு செல்ல வேண்டாம்
- பிட் அடித்து மாட்டும் வரை அசர வேண்டாம்
வாலிபத்தில்
- சீக்கிரத்தில் பணம் சேர்க்க நேர்மை வேண்டாம்
- பெட் அடித்து சூதாட தயங்க வேண்டாம்
- அடிதடியில் இறங்காமல் தடுக்க வேண்டாம்
- சகிப்புத்தனம் சலிப்பு தரும் சேர்க்க வேண்டாம்
- நல்லவரின் அறிவுறையை நினைக்க வேண்டாம்
- வல்லவரின் கால்பிடிக்க தயங்க வேண்டாம்
- படித்தால் தான் பட்டம்யென அஞ்ச வேண்டாம்
வேலை கிடைத்த பின்
- நம்மைவிட முன்னேற்றம் யெவர்க்கும் வேண்டாம்
- நட்புதனில் இலாபமின்றி சேர்க்க வேண்டாம்
- கொடுக்கும் குணம் எடுக்கும் வரை குறைய வேண்டாம்
- கெடுக்கும் மனம் இருக்கும் வரை மறைய வேண்டாம்
- எடுக்கும் தனம் திருட்டுஅல்ல விடவும் வேண்டாம்
- அலுவலக தூக்கத்தை நிறுத்த வேண்டாம்
- தொலைபேசி அரட்டைகளை குறைக்க வேண்டாம்
ஆட்சிக்கு வந்தபின்
- எதிரிகூட கூட்டுசேர வெட்கம் வேண்டாம்
- வாக்குறுதி தொகுதி பற்றி நினைக்க வேண்டாம்
- அன்பளிப்பாய் தருவதைநீ மறுக்க வேண்டாம்
- அரசியலில் இதுசகஜம் மறக்க வேண்டாம்
- பொய் சொல்வார் முன் மெய்யை பேச வேண்டாம்
- புறம் கூறி களிப்பாற்று கலைக்க வேண்டாம்
- விதிகளை மீறிடவே தயங்க வேண்டாம்
- விளயாட்டு கலவரங்கள் அழிக்க வேண்டாம்
- பதவி தரும் உரிமைகளை அறுக்க வேண்டாம்
வியாபார யுக்தி
- தொலைகாட்சி நாடகங்கள் தவிர்க்க வேணடாம்
- விளம்பரங்கள் கண்டு மனம் வெம்ப வேண்டாம்
- ஆபாச ஆடைகளை தடுக்க வேண்டாம்
- கலப்படத்தில் கஞ்சத்தனம் பிடிக்க வேண்டாம்
- பணம் கொடுத்து காரியங்கள் இழிவு வேண்டாம்
- பிறர் செய்யும் பிழைகளை மறக்க வேண்டாம்
- தன்னிச்சை செயல்படுத்த தயங்க வேண்டாம்
- சுதந்திரமாய் தப்பு செய திகைக்க வேண்டாம்
சாரம்
குடிகளின் செயல்பாட்டில் இத்தனை ஊழல்
கோனென்ன மந்திரியும் அத்தனை ஊழல்
நடப்பதுதான் நடக்கும்மென அறிந்த பின்னும்
கிடைப்பதுதான்கிடைக்கும் என புரிய வேண்டும்
கண்மூடி கொண்டாலும் இத்தனையும் நடக்கும்
கண்திறந்து கண்டாலும் இத்தனயும் நிகழும்
ஊழலில் உலகமெல்லாம் ஊறிஊறி போனதனால்
நீயும் நானுமென விதிவிலக்கா! சொல்லுங்கள்
Subscribe to:
Comments (Atom)




