சுதந்திரதின நல் வாழ்த்துகள்
வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!
வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!
எங்கே போகிறது காலம்
இங்கே யேனலங் கோலம்
மேலே எழுகிறது நாசம்
கீழே விழுகிறது தேசம்….ஓ..()
குழிகள்பறித்து முடமானார்
விழிகளிருந்தும் குருடானார்
செவிகளிருந்தும் செவிடானார்
அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ஓ..()
கற்ற கல்வி தரும் பட்டம்
உற்ற வேலை யின்றி கட்டம்
வரிகள் போக வருமானம்-அவ
மானம் இங்கு வெகுமானம் ……ஓ..()
மதங்கள் பிரித்து பெறும் ஓட்டு
மதிக்கும் பெரியவர்கள் கூட்டு
சாதி பெயரில் வாக்கு சீட்டு
மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……ஓ..()
நீதிநியாயம் வெறும் பேச்சு
பாதிதர்மம் எங்கு போச்சு
வாய்மைவெல்லுமெனும் சிங்கம்
என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……ஓ..()

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்