Saturday, 3 December 2022

சக்கரம் ஏந்திடவா

 எத்தனை எத்தனை பிறவிகளில் எனைத் தொடர்ந்தாய் கண்ணா

அத்தனை அத்தனை தவப்பலன் சேர தந்தமணி வண்ணா ()


கம்சனும் கலியும் ஒரு குலமே 

இம்சைகள் தொடர்ந்திடுமே

வம்சமும் வஞ்சமும் துயர் தருமே 

தொல்லைகள் துயர்தருமே

கல்வியின் சாலைகள் முழுவதுமே கள்வெறி போதையிலே 

தொல்பொருள் கோபுரம் கோயில்களும்

அழிந்திடும் வேளையிலே ( ) 

இழுக்குகள் யாவையும் அலங்கரித்து விருதுகள் வழங்குவதா

அழுக்குகள் யாவையும் பொய்யுரைக்க அழகெனச் சொல்லுவதா

வழக்குகள் குற்றங்கள் வளர்த்திடவா 

நீதியை நசுக்கிடவா

பழக்கமும் பிரிவினை   வளர்ப்பதிலா

கழிவுகள் உண்பதிலா

கலக்கமுற இங்கு கலங்குகிறோம் சக்கரம் ஏந்திடவா ()

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்