சிக்கினேன் கீர்த்தனை
ராகம் பைரவி
(சத்தியமணி)
சிக்கினேன் திருவடியில்
சிக்கென பிடித்து கொண்டேன்
மக்கென விலக்காது அருள்தரவேணும் சங்கரி ( )
திக்கெலாம் ஒளியாய் நிறைந்து நிற்பவளே
பக்கமே வந்தெனை பாடவைப்பவளே ( )
முக்காலமும் அறிந்த பரமனின் வலபுறமே
இக்காலம் இனிதென விரைந்திட வரம்தரவே
பக்தனாய் பார்க்காமல் பிள்ளையாய் மீனாட்சி
எக்காலமும் வெற்றியே அருள்வதே உன்காட்சி ( )

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்