கார்த்திகை பாவாய் பதிகம்
06 12 22 சத்தியமணி
கார்த்திகை அகலொளியில் சிரிப்பானே எம்பாவாய்
கண்களென சுடரெடுத்து பார்ப்பானே எம்பாவாய்
கனலாய் தொட்டுவிடின் சுடுவானே எம்பாவாய்
கழலைப் பிடித்துவிடு
துதிபாடு எம்பாவாய் ....1
சாற்றும் மாலையெலாம் வாசமுறும் எம்பாவாய்
ஏற்றும் திருவிளக்கு ஒளிசேர்க்க எம்பாவாய்
கூற்றும் மெய்யாகும் நலம்நல்கும் எம்பாவாய்
ஆற்றல் பெருகிவிடும் அடிபணியாய் எம்பாவாய்..2
இல்லறம் நலமாகும் இவ்வொளியில் எம்பாவாய்
இல்லம் ஒன்றாக்கும் இன்பம்வரும் எம்பாவாய்
உள்ளம் இருள்நீங்க உடனேற்று எம்பாவாய்
கள்ளம் வஞ்சமெலாம் பொடியாகும் எம்பாவாய்..3
கோவர்த் தனம்பிடித்து குடையானான் எம்பாவாய்
கோபியரின் கருவிழியில் ஒளிர்வானே எம்பாவாய்
காதற்பெருகும் மனம்
கைகளிலே எம்பாவாய்
கண்ணன் மணம்நேர விளக்கேற்று எம்பாவாய்...4
தப்பினை செய்யாது தவறாதே எம்பாவாய்
நப்பின்னை நாரணனை நாவேற்று எம்பாவாய்
நாராயணாய நம அரிஓமென எம்பாவாய்
இரண்டதை ஒன்றாக்கும் இரகசியமே எம்பாவாய்...5
அடிமுடி அறியாத அருந்தீபம் எம்பாவாய்
அண்ணா மலைமுடியில் காப்பானே எம்பாவாய்
சிவயநம நமசிவய செப்பிவிடு எம்பாவாய்
வயநமசி யமநசிவ செபிக்கையிலே எம்பாவாய்..6
அகத்தினை அகலாக்கி
பக்திவிடு எம்பாவாய்
அழகனை முருகனென
பழகவிடு எம்பாவாய்
வேலானத் தீபமதில்
ஒளிபிறக்க எம்பாவாய்
சரவண பவனனுக்கு
முன்வருவான் எம்பாவாய்..7
விழிகளைச் சுடராக்கும் கெளரியவள் எம்பவாய்
வித்தைகளும் பதவிகளும் தருவாளே எம்பாவாய்
ஐயும் கிலியும் நமக
செளமென்றும் எம்பாவாய்
குங்குமத்தில் அர்ச்சிக்க
மங்களங்கள் எம்பாவாய்..8
இரண்டாய் இருந்தாலும் ஒன்றாவான் எம்பாவாய்
ஒன்றில் பலவாகி விரிந்தானே எம்பாவாய்
நன்றாய் உள்வாங்கி நாவெல்லாம் எம்பாவாய்
குன்றாய் கோபுரமாய் உனையாக்கு எம்பாவாய்..9
நினைக்கின்ற பக்தருக்கு அதுபோலே எம்பாவாய்
நிறைந்திடவும் அருட்தரவும்
விளக்கேற்று எம்பாவாய்
சாட்சிதரும் சனாதனம் தர்மநெறி எம்பாவாய்
கார்த்திகைப் பதிகம்படி
நற்பவியே எம்பாவாய் ...10
சரணம்
அருட்பெரும் சோதியை ஆதியந்த மிலாயிறையை
ஐம்பூதத் துறைபவனை
அண்டவெளி நிறைந்தோனை
அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாபெரும் பேரரறிவை
மாயையிலா நிர்மலத்தை மனதீபமேற்ற பிறவியறு
