உலக கவிஞர்கள் தினமென்று
தொலைக்காட்சி படித்தது
உலக கவிஞர்கள் தினமின்று
மனசாட்சி இடித்தது
உலக கவிஞர்கள் தினம்-என்று
வல்லமை விரைந்தது - மனம்
உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
தனைத் தேற்றி கொண்டது
என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென
பாவலர் வரிகள் மீறும்
இன்று ம்களைக்க மாட்டோ மென்றென
காவலர் வரிகள் கூறும்
படக் கவிதைப் போட்டிக்கு வாருமென
அண்ணாவின் அழைப்பில் சேரும்
படக் கவிதைப் பாராட்டு பாருமென
மேகலையின் தேர்வில் தேறும்
ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
கிரேஸியின் வெண் பாக்கள்
தேயாது வானில் பாடும் மீன்களாய்
செண்பகப் புது கவிகள்
பாயாது பெருக்கு எடுத்து பாயும்செய
பாரதன் தரும் வரிகள்
சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க
ஜெயசர்மா மரபு கவிகள்
எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
இத்தகு வல்லமை இணையம்
அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
வாழியே தமிழே இனியும்
வாழியே தமிழே நீயும் !!

Sloty Casino NY - MapyRO
ReplyDeleteSloty Casino NY. 사천 출장마사지 Information, Reviews. Games, Specializing in Online Slots, Blackjack, Roulette, Video Poker. Game 김해 출장마사지 Room, 161650 강원도 출장안마 East Flamingo 서귀포 출장안마 Rd, Las 남원 출장샵 Vegas, NV 89109.