அந்த வருடம் புதியவருடம் 2019
வருவது யாரோ??...புது வருடமா!!
தருவது தானோ ?? இனிய வரமா!!
முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா?
உறவுகள் கூடி விருந்து தருமா?
எந்நேரமும் வாட்ஸ்அப். ...வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
எப்போதுமே. ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஃபேஸ்புக்
இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங்
மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
தங்க நேரம் வீணாக்கி கழிகின்றதே
வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே...
()
தாயுடன் பாட நேரமில்லையா
தந்தையுடன் பேச வார்த்தையில்லையா
உறவுகள் ஒன்றாய் கூடவில்லையே
நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே
இந்த வருத்தம் நீக்கிடுமோ
அந்த வருடம் புதியவருடம்.
()
அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம்
பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம்
அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம்
அதற்கும் மேலே தனித்து தவிர்த்தோம்
இந்த வருத்தம் நீக்கிடுமோ
அந்த வருடம் புதியவருடம்

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்