அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலவசங்கள்
பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வாக்குறுதி
அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வரிக்குமேல்
வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சேதுசிதைத்து
ஈழம்பிரிந்து வாடுகின்ற போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பெரும்பாண்மை
பெற்றும்பின்னர் சிதறுகின்ற போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலஞ்சமென்று
ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
காவிரியா
கங்கையுமே காயவைத்த போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சாதிகள்
சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும்
போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
தங்கத்தாலி
பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஒற்றுமைக்கு
வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
டாலர்ஏற
ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
மின்வெட்டு
விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அடிக்கடி
தேர்தல் என்று அசிங்கம்
பட்ட போதிலும்
மிச்சமில்லை
வெட்கமில்லை சொல்வதற்கு
இல்லையே

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்