கொதித்து நீயும் முகிலாகு
குளிர்ந்து நீயும் மழையாகு
விதையில் இருந்து மரமாகு
கனிகள் உதிர்ந்து விதையாகு
கருவம் ஒழித்து மொட்டாகு
உருவம் உரித்து மலராகு
இரவல் கேட்டு இலையாகு
இருக்கும் வரையில் விருந்தாகு
குழப்பம் விலக்கும் குணமாகு
கலக்கம் கழிக்கும் கணையாகு
விளக்கம் வழங்கும் அறிவாகு
இலக்கம் இல்லா சுழியாகு
புரியும் வரையில் புதிராகு
புரியா தவர்க்கும் புலனாகு
தெரியும் வரையில் தெளிவாகு
தெரியா தவர்க்கும் ஒளியாகு
அடக்கம் என்னும் அழகாகு
அசத்தும் விந்தை கவியாகு
அட்சயம் பகிர்ந்து அன்பாகு
அன்பைத் தந்து இறையாகு

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்