Friday, 17 May 2013

அறுபடை ஆண்டோன் துதி

ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
உணர்த்திய சுவாமிநாதா – swami malai
தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
மலையாள
ும் பழனிபாலா - pzhani
நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
அலைவாழும் வெற்றிவேலா - Thiruchenthur
பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
தலைவனாய் தணிகைமேலா – thiru thanikai

நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
குன்றேறி குளிர்ந்தகுமரா – thiruparang kuntram
முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
பழஞ்சோலை வாழும்முருகா – pazhamuthir solai
புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
வித்தையைத் தந்தகுருவே
சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
நித்தமென் நாவிலருளே

 

மகிழ்வுமிக்க மகாத்மா காந்தி பிறந்த நாள்.....



காந்தி என்றவுடன் மகாத்மா ஆகிடுமோ



தனக்கென்று வாழாது தாயகத்தை வாழவைத்தார்
தன்குலத்தை சேர்க்காது தான்மட்டும் கால்வைத்தார்
பகட்டாடை பட்டாடை துறந்திடவே கணையானார்
பொய்யோடு சேராது வாய்மைக்கு துணையானார்

தந்திரமாய் நடக்காது சுதந்திரமாய் சொற்பயின்றார்
மந்திரியாய் ஆளுனராய் வேண்டாது தனிநின்றார்
கோலூன்றி நடந்தாலும் கோளுரைக்க விழையாது
சோர்வின்றி சத்தியத்தை தோளேற்றி படைவென்றார்

அதிகாரம் பயன்படுத்தி அரசங்கம் நடத்தவில்லை
அடுகில்லம் ஆளடிமை அரியணையும் அவர்க்கில்லை
வறியவர் ஆடையிலே வக்கீலும் சலிக்கவில்லை
அரிசனக் குடிசையிலே வாழ்கையிலே வருந்தவில்லை


மதமின்றி இனமின்றி எல்லோரும் இந்தியராய்
வாழ்திட அவர்கனவு! வீழ்ந்திட விடுவதற்கோ ?
தன்வரவு தன் உறவு தன்நலமாய் இருந்தாலும்
இன்றுவரை அக்கனவை நாம்தூங்கி தொலைப்பதற்கோ?


காந்தியா? என்றதுமே மகாத்மா ஆகிடுமோ ?
இந்தியா! இப்படியா? அவராத்மா நோவுருமோ ?

பூரணமாய் வாழ்கவென

மாசி திங்களிலே மலர்களின் காலம்

தூசி தில்லியிலே மணமகள் கோலம்


வீசி விளையாடும் குளிரோடு நேரம்


பேசி அரசியலும் பாதீடுகள் போடும்
 


வாசி யென்றெனவே வந்தச்செம் மொழியால்

ஆசி கூறிடவே அன்புடன் இன்மொழியாள்


நேசி க்கும்நாடு நிமிரவைக்க மின்வழியால்


பூசி க்கவந்தாள் ! பூரணமாய் வாழ்கவென!!
 


தையினிலே சேர்ந்தாள்

செங்கதிரின் வீச்சினிலே மங்குபனி நீர்க்கும்
சிங்கத்தமிழ் கர்ஜனையில் தில்லியினி வேர்க்கும்
நங்கையிவள் பதின்மூன்று வயதினிக்க பூத்தாள்
மங்கையரும் தையலிவள் தையினிலே சேர்ந்தாள்


தங்கவிலை ஏறிடினும் அங்கமெங்கும் பூட்டி
மங்களமும் அலங்கரிக்க மேடைநடை காட்டி
சங்கடங்கள் தீர்க்கும்வி நாயகனைக் கூட்டி
சங்கங்களில் சங்கமித்தாள் சேர்த்துநலம் தீட்டி


கூட்டு பொங்கல் வீட்டு பொங்கல் நாட்டுபொங்கலோடு
பாட்டு பொங்கல் மாட்டு பொங்கல் ஆட்ட‌பொங்கலோடு
பானைப் பொங்கல் விசில் பொங்கல் ஒவன் பொங்கலுண்டு
மானைப் பழிமை விழிகள் ஆவலுடன் உண்டு

உண்டதெல்லாம் ஊட்டமுடன் உயிர்வளர்க்க வேண்டும்
கண்டதெல்லாம் நம்வசமாய் களிப்பளிக்க வேண்டும்
இந்தமுறை தலைமுறைகள் தமிழைகற்க வேண்டும்
அந்தமுறை வருமுறைக்கும் தமிழுரைக்க வேண்டும்