முருகா உன்
காலைப் பிடித்தேன் உன் கையுள
வேலைப் பிடித்தேன்
கந்தனே அகலாதிரு என் கண்களை விலகாதிரு ()
யாமிருக்க பயமெதற்கு எனச் சொன்னவா உன்
வாளிருக்க வேலிருக்க பகை வென்றவா
பாலிருக்க தேனிருக்க பழச்சாறில் குளித்தவா
தானிருக்க என்மனதை ஆட்கொள்ள வாவா ()
ஈராறு விழிகளிலும் எனைப் பார்க்கவா
செவி
சீராக குழையாட குதித்தாடவா
கோளாறு பலநீக்கி குணமாக்கவா தினம்
காலாற படைவீடு கள் சுற்றவா
அடங்காத மனதுக்கு அணையாகவா நெற்றி
அணிகின்ற திருநீரில் மருந்தாகவா ()
